காத்தான்குடியில் யூனானி வைத்தியசாலை விரைவில் நிறுவ நடவடிக்கை - ஹிஸ்புல்லாஹ்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் யூனானி வைத்திய கற்கை நெறிகளை ஆரம்பித்து அதன் வைத்தியசாலையொன்றை மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் நிறுவவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முழு ஆதரவுடனும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் யூனானி மருத்துவ பீடத்தை ஆரம்பித்து யூனானி மருத்துவத்தை கற்கும் மாணவர்களின் நலன் கருதி அதன் வைத்தியசாலையொன்றை காத்தான்குடிப் பிரதேசத்தில் நிறுவுவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
யூனானி வைத்தியசாலையை காத்தான்குடியில் நிறுவுவதற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணியை நேற்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகர சபை மற்றும் பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
குண்டு சட்டிக்க குதிரை ஓட்டுவதே இவருக்கு வேலை இருக்கவே இடம் இல்லையாம் இதுக்க யூனானி பீடம் காதான்குடிக்கி தேவையா? அத எங்காவது இடவசதி உள்ள இடத்தில அமைப்பதுதானே?
ReplyDelete