பொதுபல சேனா மீது சீறிப்பாய்கிறது தவ்ஹீத் ஜமாஆத் (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இந்தியாவின் தஞ்சாவூர், திருச்சி மற்றும் சென்னை ஆகியவற்றில் வைத்து பௌத்த பிக்குமார்கள் தாக்கப்பட்டதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் இடம்பெற இடமளிக்கக்கூடாது என்றும் இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு இன்று புதன்கிழமை(20) கொழும்பு கொம்பனித்தெரு நிப்பன் ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.றியாழ், செயலாளர் அப்துல் றாசிக், துணைத்தலைவர் பர்ஸான், துணைச் செயலாளர் றஸ்மின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் விளக்கமளிக்கையில் இந்தியாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தை மையமாக வைத்து இலங்கையில் உள்ள பௌத்த இனவாத அமைப்பான பொதுபல சேனா உண்மைக்கு புறப்பான போலித்தகவல்களை தங்களது ஊடக அறிக்கையில் வெளியிட்டு உள்ளனர்.
குறிப்பாக தமிழ் நாட்டில் பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு பினனணியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளதாகவும் இவர்கள்தான் பொதுமக்களை பிக்குமார்களுக்கு எதிராக தூண்டுவதாகவும் இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அதரவான அமைப்பினர் என்றும் அறிக்கை விடுத்துள்ளனர். அஅத்தோடு இலங்கையில் செயற்படும் ஏகத்துவ பிரச்சார அமைப்பாகிய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இது குறித்த தகவல்களை வழங்குவதால் இவ்வமைப்பை இலங்கையில் உடனடியாக அரசு தடை செய்யவேண்டும் எனவும் தங்கள் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் இவ்வூடக அறிக்கையினை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. ஏனெனில் நடந்த சம்பவம் குறித்த தகவல்கள் இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் தெளிவாக வந்திருக்கும் நிலையிலும் யார் இத்தாக்குதலுக்குப் பின்னணியில் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக நிரூபணம் அஅனதற்குப்பிறகும் அப்பட்டமான அவதூறுச் செய்திகளை பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பு அறிக்கைகளாக அறிவித்துள்ளமை இவர்களின் உண்மை முகத்தை உலகத்திறகே தோல் உரித்துக் காட்ட போதுமான சான்றுகளாகும்.
உண்மையில் நடந்தது என்ன?
கடந்த 16.03.2013 அன்று டெல்லியிலுள்ள தொல்லியல் ஆராய்ச்சி மையத்தில் பயின்றுவரும் சீனா, தாய்லாந்து, பர்மா, இலங்கை மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 19 மாணவர்கள் தொல்லியல்துறை ஆய்வுப்பணிக்காக தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்தபோது தாக்கப்பட்டனர். இத்தாக்குதலில் தமிழ் தேச பொதுவுடமை கட்சி தலைமை செயற்குழ உறுப்பினர் பழனி ராஜேந்திரன், தஞ்சை நகர செயலாளர் இராசு முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணி துணைத்தலைவர் கே.செந்தில் குமரன், நாம் தமிழர் கட்சி ஒரங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, விடுதலை தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்;ந்த அருள் மாசிலாமணி, ம.தி.மு.க கட்சி குழுவினர் உட்பட பலர் ஈடுபட்டனர். இவர்கள் 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 18.03.2013 அன்று உடதலவின்னே வஹீத தேரர் 16 யாத்திரிகர்களுடன் புத்தகாயவிலிருந்து திரும்பும்போது நாம் தமிழர் கட்சி அதரவாளர்களினால் சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் இடம்பெற்ற பிக்குமார்களுக்கு எதிரான இவ்விரு தாக்குதல்களுக்கு பின்னணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ், மற்றும் இந்து அமைப்புக்களே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று இந்திய பத்திரிகைகளே தெளிவாக தகுந்த சான்றுகளுடன் அறிக்கை விட்டிருக்கும்போது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விதமாய் பொதுபல சேனா இப்பிரச்சினையோடு எள்முனையளவும் சம்பந்தமில்லாத தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்அத்தையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்அதையும் தொடர்புபடுத்தியிருப்பதானது பொதுபல சேனாவின் வடிகட்டிய முட்டாள் தனத்தையும், உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெளிவாக இருக்கும்போது போலியான செய்திகளை இட்டுக்கட்டி மக்களிடம் பரப்;பி இனமுரண்பாடுகளை தோற்றுவிக்க முயலும் நரித்தனத்தையும் பட்டவர்த்தனமாய் வெளிகாட்டி நிற்கிறது.
பிக்குமார்களை தாக்கிய விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களை கண்டிப்பதை விட்டுவிட்டு விடுதலைப் புலிகளை பகிரங்கமாய் எதிர்த்து குரல்கொடுத்து வரும் தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்டோரை பொதுபல சேனா கண்டித்திருப்பதிலிருந்து, பொதுபல சேனா அமைப்பினர் ஆகிய இவர்கள் தான் டுவுவுநு என்ற பயங்கரவாத அமைப்பை பாதுகாத்து வளர்க்க எத்தணிக்கின்றனர் என்பது தெட்டதெளிவாய் பளிச்சிடுகிறது. அத்தோடு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது குற்றம் சுமத்தி சுட்டுவிரல் நீட்ட எதுவொன்றும் இல்லாத நிலையில் போலிகளை சோடித்;து எம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஆசைப்படும் பொதுபல சேனாவின் முதுகெழும்பற்ற கோழைத்தனத்தையும் துகிலுரித்துக் காட்டுகிறது.
உலகறிந்த மகா உண்மையினைக்கூட மொத்;தமாய் தங்கள் திரிபுவாதங்களால் திசை திருப்புவதற்கு எப்படி பொதுபல சேனா பகீரத பிரயத்தனம் எடுக்கிறதோ, இதேபோன்று தான் இதற்கு முன்னும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள், ஹலால், ஹிஜாப், பள்ளிவாசல்களில் தீவிரவாத பயிற்சி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல் உள்ளிட்ட இவர்களின் ஏனைய குற்றச் சாட்டுக்கள் ஆகும். இவை அனைத்தும் அடிப்படையற்ற அண்டப்புளுகுகள் ஆகும் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.
சகவாழ்வுடன் பயணிக்கும் இலங்கையின் அமைதிச் சூழலை தங்கள் இனவாதத்தை கக்கும் திரிபுவாதங்களால் சிதைத்து, மீண்டும் ஒரு இனக்கலவரத்தை உருவாக்க நினைக்;கும் பொதுபல அடஙசேனா என்ற அமைப்பு இந்நாட்டின் அமைதிக்கு வேட்டு வைக்கும் பயங்கரவாத அமைப்பாகும். எனவே இப்பயங்கரவாத அமைப்பை உடடினடியாக தடைசெய்யுமாறு இலங்கை அரசுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுக்கிறது. பொதுபல சேனா என்ற தீவிரவாத அமைப்பின் குட்டுதல்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் அடங்கிப்போகமாட்டாது என்பதையும், பறிக்கப்படும் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காய் இறுதிவரை களத்தில் நின்று ஜனநாயக வழிகளில் போராடும் என்பதையும் இலங்கை வாழ் மக்களுக்கு இத்தால் அறிவித்துக் கொள்கின்றது.
May Allah help you all
ReplyDeletejazakallahu hairen.
ReplyDeleteInsha allah unkalathu payanaththil allah vettiyai thare vendum.! Aameen.!
Insha alla islaththitkaha nadaththapdum poaraddankalil oru muslim entre vakaiel naanum kalanthu kolvean.
jazakallahu hairen.
ReplyDeleteInsha allah unkalathu payanaththil allah vettiyai thare vendum.! Aameen.!
Insha alla islaththitkaha nadaththapdum poaraddankalil oru muslim entre vakaiel naanum kalanthu kolvean.
ithu muslimgalay pirikkum rowdi seyna. peerangip paychilum, olukkamatra nadaththeyilum iwarkalukkum, BBS itkum withthiyasum kuraywu
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுக்க எவரும் முன் வர மாட்டார்களா என்று பாலை வனத்தில் தண்ணீருக்கு ஏங்கும் நிலையில் இருந்த முஸ்லிம் சமூகத்துக்கு உங்களது பிரவேசம் மகிழ்ச்சியளிக்கிறது இறைவன் உங்களுக்கு துணை புரிவானாக
ReplyDeleteஉங்களுக்கு அல்லாஹ் சகல பாதுகாப்பையும் இஸ்லாமிய சமூகத்திற்க்காய்ப் போராடும் தைரியத்தையும் துணிச்சலையும் வழங்கட்டுமாக! இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் எமது மார்க்கத்திலும் மக்களிலும் கை வைக்கும்போது அணைவருமாக ஒன்று திரண்டுவிட்டால். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. வெறும் கருத்து வேற்றுமைகளால் மட்டும் நமக்குள் பிரிவுகள் வேண்டாம்
ReplyDeleteபொதுபல சேனாவுக்கு பாடம் கற்பிப்பதற்கு இப்போதுதான் இறைவனை உறுதியாக நம்பக்கூடியவர்கள் அல்லாஹ்வை மட்டும் பயப்படக்கூடியவர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ் இந்த பயங்கரவாத அமைப்பை களைய இறுதிவரை போராட எனது பங்களிப்பை தருவதற்கு நான் உறுதி கூறுகிறேன். இன்சாஹ் அல்லாஹ் இவ் பயங்கரவாத அமைப்பை களைவோம்
ReplyDeletebodu bala senawai naar urikka nalla santharpam ACJU adangipponathu pol neegalum adangamal thulliyamaha porada yenathu piraarthanaihal....
ReplyDeleteWhat a madness of this Nizar, he don't know where and what to comment at this time. Don't show your utter stupidity at this time by trying to show some discrimination between Muslim. Try to understand the situation and be as one Muslim Umma.
ReplyDeleteIf not, be quiet. Even if you don't do any thing to this Muslim Umma, don't try to do harm to our Muslim Community.
நிசார் உன்னை அல்லாஹ் பார்த்துக்கொள்வான்
ReplyDeleteதமிழ் செய்திகளை பார்க்கிற comment ஆங்கிலத்தில் ஏன் இப்படி
ReplyDelete@nizar
ReplyDeleteஅப்போ ஒழுக்கமுள்ள, முஸ்லிம்களைப் பிரிக்காத நீங்க போகலாமே களத்துக்கு!
iwanuwal kalaththukku powaanuwal waayala.
ReplyDeleteஆனால் வரலாறு அப்படி இல்லையே!!
ReplyDelete