'சிங்கள பிரதேசங்களில் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் என்பதாலே மௌனியாக இருக்கிறோம்'
(அனா)
இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லீம்களின் மார்க்க விடயங்களையும், இஸ்லாமிய கோட்பாடுகளையும் பற்றி கருத்துக் கூறுவதற்கு பொதுபலசேனா அமைப்புக்கு எந்தவித அருகதையும் கிடையாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் கொங்ரிட் வீதிகள் மற்றும் வடிகான்களை அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் ஆசிரியர் ஏ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று பொது பலசேனா அமைப்பினர் முஸ்லீம்களின் மார்க்க விடயங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு ஹலால் விடயங்கள், முஸ்லிம் பெண்களின் அபாயா மற்றும் புனித அல் குர்ஆன் போன்ற இஸ்லாமிய மார்க்க விடயங்களில் முஸ்லீம் சமுகத்தின் மனம் நோகும்படி தொடர்ந்து செயற்பட்டால் அதற்காக அவர்கள் பெரும் மோசமான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
எங்களின் மார்க்க விடயங்களை யாருடைய அபிலாசைகளுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது மார்க்க விடயங்களை இவர்களுக்காக விட்டுக் கொடுத்துப் பேசுவதற்கு நான் தயாருமில்லை.
இந்த நாட்டைப் பொறுத்தவரை மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல் ஆட்சிக் காலத்தின் போதும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன ஆனால் இப் பிரச்சினைகளை நாங்கள் அரசியலுக்காக சமூகத்தை அடகு வைக்க ஒரு போதும் தயாரில்லை.
முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு எதிராக சவால்கள் விடப்படுமாக இருந்தால் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம் நாங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய எவ்விதத் தேவையும் எமக்குக் கிடையாது இதனால் நாங்கள் பொது பலசேனா அமைப்பினரரைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிங்களப் பிரதேசங்களில் முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நாங்கள் மௌனியாக இருக்கின்றோம் நாங்கள் மௌனியாக இருக்கின்றோமே தவிர அது அரசியல் ஏலாத் தன்மையன்ற கருத்தல்ல.
இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் வேறு எந்த இனத்தினதும் மார்க்க விடயங்களில் கை வைத்ததும் கிடையாது எந்த இனத்திற்கு எதிராகவும் ஆயுதங்கள் ஏந்தி போராட்டம் நடத்தவுமில்லை இஸ்லாம் மார்க்கம் போதித்துள்ள சாந்தி, சமாதானம், இன ஐக்கியம், நாட்டின் இறைமை, மக்களின் சம உரிமை என்பவற்றினைக் கடைப் பிடித்தே முஸ்லீம் சமூகம் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்பது சகலரும் அறிந்த விடயம்.
ஆனால் முஸ்லிம்களின் எந்த விடயத்தினையும் அறியாத இவர்கள் பொது பலசேனா எனும் அமைப்பை தொடங்கிக் கொண்டு முஸ்லீம்களின் மார்க்க விடயங்களைப் பற்றி கூறுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது என்றும் கூறினார்.
ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் பாத்திமா பாலிகா 3ம் குறுக்கு வீதிக்கு பதினைந்து லட்சம் ரூபா செயவில் வடிகானுடனான கொங்ரீட் வீதியும், ஜூம்ஆப் பள்ளி 2ம் குறுக்கு வீதிக்கு பத்து லட்சம் ரூபா செலவில் வடிகானும், ஐஸ்வாடி வீதிக்கு பத்து லட்சம் ரூபா செலவில் கொங்ரீட் வீதியும் அமையப் பெறவுள்ளது. இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
;
CORRECT
ReplyDeletethanks sir and these are golden word but it had better to say in sinhala to publish in sinhala medias then only sinhala community will understand the naughty pothu bala sana's play
ReplyDeleteபயத்துல பேசாம இருக்கிறதுக்கு என்னவெல்லாம் காரணங்கள் கண்டு பிடிக்கிறாங்கப்பா. இவர BBS கிட்ட யார் பேசச் சொன்னது? வேல நடக்க வேண்டிய இடத்தில் பேசாம சும்மா....
ReplyDeleteசார், இந்த பொது பல சேனாவை இயக்கிக் கொண்டிருப்பது ராஜபக்க்ஷ அன் கம்பனி என்பது உங்களுக்கு தெரியாதோ..!!! இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை கடைபிடிக்காமல் துஸ்பிரயோகம் செய்யும் இந்த ராஜபக்கச அன் கம்பனி தான் என்பது புரியாதோ..!!! நீங்கள் சரியான முஸ்லிமாக இருந்தால் இந்த ராஜபக்ச அன் கம்பனியை கண்டித்து அறிக்கை விடுங்கள் பார்க்கலாம். அதை விட்டு விட்டு சும்மா பொது பல சேனாவை பேசுவதில் பலன் இல்லை. இது அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி நீங்கள் அரசியல் இலாபமீட்ட முற்படுகிறீர்கள்.
ReplyDelete@Kuruvi
ReplyDeleteஉங்க பிரச்சின தான் என்ன? ராஜபக்ச கம்பெனிய திட்டித் தீர்த்தால் சரியா? நானும் பாத்திட்டுத் தான் இருக்கான் BBS ஹலால் , ஹலால் என்று ஓலம் போடுவது போல ராஜபக்ச கம்பெனி , ராஜபக்ச கம்பெனி என்று கொண்டே இருக்கிறீங்க!! நீங்க என்னத்த காஸ் அடிச்சாலும் நாங்க ஒங்களப் போலையோ, BBS ஐப் பின்பற்றும் துவேஷிகளைப் போலவோ ஏற மாட்டம். பிரச்சினை முள்ளில் விழுந்த சேலை. எங்களுக்குத் தெரியும் எப்படி எடுப்பது என்று. உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது நல்லது.