Header Ads



இலங்கை பெண் ஜோர்தானில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்


(NF) ஜோர்தானில் தொழிலுக்குச் சென்று காணாமல்போயிருந்த இலங்கை யுவதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெக்கிராவ, கிரிமிட்டியான பகுதியைச் சேர்ந்த 24 வயது யுவதியே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

குறித்த யுவதி 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி அநுராதபுரத்திலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜோர்தானில் தொழிலுக்காக சென்றிருந்தார்.

ஆறு வருடங்களாக தமது மகள் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என யுவதியின் தாய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, யுவதியின் மரணம் தொடர்பில் ஜோர்தானுக்கான இலங்கை தூதரகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.