ஊமை விழிகள்..!
(எச். பைஸ் - அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம்)
இந்த தலைப்பு இரு மாறுபட்ட உறுப்புகளை கொண்டது. ஓன்று வாயால் பேசுதல் மற்றது கண்ணால் பார்த்தல். அதாவது கண்ணால் இலங்கையில் நடக்கும் எல்லா முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளையும் பார்த்து எதுவும் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருப்பதைத்தான் இது குறித்து நிற்கிறது .
இன்று இலங்கையில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஒரு சில நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய நடக்கும் பிரச்சினையாக தெரியவில்லை. மாறாக இலங்கை முஸ்லிம்கள் இன ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக முடக்கி அவர்களை ஆயுதம் எந்த வைத்து அதன் காரணமாக அவர்களை அடக்கி நாட்டை விட்டும் வெளியேற்றி விடத்தான் இப்படியான நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுகின்றன என்பதை சீரிய சிந்தனையுடைய எவரும் மறுக்க முடியாது .
இதற்கு காரணமாக பொது பல சேனா என்ற ஒரு பௌத்த தீவிரவாத இயக்கம் வெளிப்படையாக தெரிந்தாலும் அதன் பின் புலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பலத்த சக்தி இருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும் .
ஆனால் இங்கே நான் சுட்டிகாட்ட நினைப்பது அதுவல்ல மாறாக இன்று இலங்கையில் நடைபெறும் அனைத்துவித முஸ்லிம் எதிர் நிகழ்வுகளை கண்டும் வாய் மூடி எதுவும் பேசாமல் இருக்கும் முஸ்லிம் சமூகத்தை பற்றி தான் .
இப்படி இலங்கை விடயத்தில் வாய் மூடி மௌனிகளாக இருக்கும் தரப்புகளை பின்வரும் தரப்புகளாக பிரித்து கூற முடியும்.
1. இலங்கையில் நடக்கும் பிரச்சினைகள் என்னவென்று தெரிந்தும் அதை பற்றி ஆக்க பூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் முஸ்லிம் வெளிநாடுகள்.
2. ஒரு இனத்தை குறி வைத்து தாக்கும் நிகழ்வை கண்டும் அதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுத்து நிறுத்த சக்தி பெற்றிருக்கும் இலங்கை அரசு மௌனம் காப்பது.
3. பொறுப்பு சொல்ல கடமையுள்ளவர்களாக இருந்து முஸ்லிம்களை அனைத்து வித எதிர் நடவடிக்கையில் இருந்தும் பாதுகாக்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் வாதிகளின் மௌனம்.
4. எல்லா பிரச்சனைகளையும் கண்டும் அதற்கு எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் தயங்கி நிக்கும் முஸ்லிம் இயக்கங்கள் ,முஸ்லிம் தனியார் நிறுவனங்கள் , அரசியல்யற்ற மக்கள் தலைவர்கள், இலங்கை வாழ் முஸ்லிம்.
இவர்கள் எல்லோரும் இலங்கை விடயத்தில் அனைத்தும் தெரிந்தும் வாய் மூடி ஊமைகளாக இருப்பது தான் கவலையான விடயமாகும் .
எனவே இன்றைய இலங்கை முஸ்லிம்களின் உடனடி தேவை எல்லா பிரச்சினைகளுக்கும் கூட்டு அடிப்படையில் பதில் தேடுவதேயாகும் . நமக்கு சரியென்று தெரியும் ஒரு சில விடயங்களுக்காக மற்றவர்களை தூரமாக்கும் நடவடிக்களை அனைவரும் தவிர்த்து நடப்பது நமது இருப்பை தக்க வைக்க உதவியாக இருக்கும் .
ஹலால் விடயத்தில் ஜம்மியத்துல் உலமா விட்டு கொடுத்து விட்டது என்று நாம் உடனடி ஆதங்கத்தின் மூலம் விசனப்பட்டு சில விமர்சனங்களையும் வெளிப்படுத்தியும் விட்டோம். ஆனால் ஜம்மியத்துல் உலமாவின் இந்த முடிவு சரியா? தவறா? என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் . இதை விமர்சிப்பது இனியும் நம் நோக்கமாக இருக்காமல் கூட்டு முயற்சியாக செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்.
எனவே இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்கும் பொறுப்பு எல்லா விதத்திலும் அனைவருக்கும் உண்டு. அதாவது முஸ்லிம் வெளிநாடுகள், ஜம்மியத்துல் உலமா ,அரசியல் வாதிகள், முஸ்லிம் இயக்கங்கள் , அதே போல் ஒவ்வரு இலங்கை முஸ்லிம் . இவர்கள் அனைவரும் இனியும் வாய் மூடி ஊமை விழிகளாக இருக்காமல் உடனடி ஆக்க பூர்வ நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்க வேண்டும் .
நாமாக நம்மை பாதுகாக்க முயற்சி எடுக்காவிட்டால் இறைவனும் எங்களுக்கு உதவி செய்ய முன்வர மாட்டான் என்பது தான் இறை வாக்காகும். ஆகவே இலங்கை முஸ்லிம் இருப்பை தக்க வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயட்பட அல்லாஹ் உதவி செய்வானாக .
நீங்கள் கூறும் முதலாவது குற்ற சாட்டுக்கு அரபு நாடுகளில் இருக்கும் srilanka முஸ்லிம் சகோதரர்கள் எவ்வாரான முயசிகள் எடுத்தனர் அந்நாட்டு அரபியருக்கு இப் பிரச்சினையை இனம் காட்ட என்பது முக்கியம் எதும் செய்யாமல் குரய்ந்த பச்சம் அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா போகும் முஸ்லிம்களுக்கு கூட உள்ள பிரச்சினை அரபி மொழி மூலம் துண்டு பிரசுரம் மூலமாவது தெரிவிக்கும் முயசிஎடுதால் அது ஸ்ரீலங்காக்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அரசு தடுக்கும் வாய்ப்பு ஏற்படலாம்
ReplyDeleteyour rihgt sir we should explain to them then only they know they problem
ReplyDeleteyes! Mohamed Azeem சொன்னதுபோல வெளி நாடுகளில் வசிக்கும் நமது சகோதரர்கள்தாம் தாம் வசிக்கும் நாடுகளுக்கு இப்பிரச்சினைகளை விபரித்துக்காட்டும் வாய்ப்பு உள்ளது. இவ்வுதவிகளை இறைவனுக்கா பெரும்தலவர்கள் புத்திஜீவிகள் மத்தியில் வசிப்பவர்கள் அவர்களுக்கு தற்போதைய நமது நாட்டு நிலைமையை கண்டிப்பாக எடுத்து கூறவேண்டும்.
ReplyDeleteஅதற்கு முதற்படியாக நாம் வாக்கழித்து தெரிவுசெய்தோமே நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டவேண்டும், அவர்கவளை நாம் வாக்கிட்டு வெல்லவைத்தோம் நமக்காக இப்படியொரு சந்தர்பத்தில குரல்கொடுப்பதற்கேயன்றி வேறெதெற்கு? ஆகவே நாட்டிலுள்ளவர்களும், மிகவும் புத்திசாலித்தனமாகவும் சாதூர்யமான முறையிலும் நம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெதிரான கேள்விகளை தொடுக்கவேண்டும் இதில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான் விடயம் என்னவென்றால், நமக்கெதிராக குழப்பங்களை உருவாக்குபவர்களின் முதல் ஆயுதம் என்ன தெரியுமா நமக்கிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைப்பது அதாவது முஸ்லிம்களோ அல்லது தமிழர்களோ தமக்குள் ஒற்றுமையாக் இருந்தால், குழப்பவாதிகளுக்கு நினைப்பதை ஒருபோதும் சாதிக்கமுடியாது அதனால்தால் நம்க்குள்ளே முதலில் அவர்கள் பிரிவினைகளை உண்டாக்குவார்கள். உதாரணமாக ஒட்டுமொத்த இலங்கைவாழ் முஸ்லிமகளுக்கும் தலைமைத்துவ வழிகாட்டும் பொறுப்பில் இன்று முஸ்லிம்களை ஒருகுடையின்கீழ் வழி நடத்திக்கொண்டிருப்பது ஜமிய்யதுல் உலமா சபைதான் அவர்கள் எடுக்கும் முடிவுக்குத்தான் முஸ்லிம்கள் கட்டுப்படுகின்றார்கள் ஆக முஸ்லிம்களை ஜமிய்யதுல் உலமாசபையிடமிருந்து பிரித்தெடுக்கவேண்டுமென்பது அவர்களின் முதற்குறியாக இருக்கின்றது அத்துடன் நம்மிடையே உள்ள சிறிய சிறிய குளுக்கள் போன்ற வித்தியாசப்படக்கூடிய கொள்கைகளிலுள்ள குளுக்களிடையே மோதல்களை உண்டுபண்ண கண்டிப்பாக செயற்படுகின்றார்கள். ஆகவே முஸ்லிம் சகோதரர்களே இப்படிப்பட்ட குழப்பவாதிகளின் பிடியிலிருந்தும், வலையிலிருந்தும் நம் சகோதரர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவது இன்றையகாலத்தின் கட்டாயதேவையாக இருக்கின்றது இதை அனைவரும் மனதில் வைத்து செயற்படுவோம் அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் நாம் இருக்கின்றோம் இப்படிப்பட்ட நிலைமகள் வராமல் காத்துக்கொள்வது நம் அனைவரினதும் கடமையாக இருக்கின்றது.
ஓரத்தில் நின்று கொண்டு ஓயாமல் தர்க்கம் செய்யும் வீரத்திற்கு இன்றே வெய்யுங்கள் முற்று புள்ளி ... கருத்து வேறு பாடேனும் கரையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும் மிஹவும் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்..
ReplyDeleteகருத்திடும்,கருத்துக்களை பார்வையிடும் சகோதரர்களே! முஹம்மட் ஹஸீம் மற்றும் ரனீஸ் இருவரும் கூறுவதில் மெத்தச்சரியுண்டு நாம் பிர்ந்துவிடக்கூடாது பிரிந்தவர்கள் ஒன்று படல் வேண்டும், எப்படி?எவ்வாறு ஒன்று படுவது இது பெறியதொரு கேள்வி? ஆளுக்கொரு வழியில் ஒன்று பட முடியுமா?என்றால் முடியாது! ஆக ஒரே வழியில் செல்ல வேண்டும்! அந்த வழி என்ன? பிரிந்தவர்கள் எலலோருக்குமான அறைகூவலை குர்ஆன் கூவி அழைக்கிறது பார்க்க அன்னிசா 58,59 ஆக புர்ஆன் ஹதீஸ் மாத்திரம் தான் எம் வழி என்போர் நிச்சயமாக,சத்தியமாக வெற்றி பெறுவர்.
ReplyDelete