முஸ்லீம் சமூகத்தின் ஒற்றுமையே எதிர்கால சமூகத்தின் வீழ்ச்சியை தடுக்க ஒரேவழி
(முகம்மது இஸ்மாயில் உமர் அலி)
இலங்கைவாழ் முஸ்லீம்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சமூக, பொருளாதார,அரசியல் உரிமைகளில் சுரண்டல் செய்யப்பட்டு, பேரினவாதிகள் வீசியெறியும் மிச்ச சொச்சங்களையே உரிமைகள் என்று நம்பி , மேட்டுக்குடியினர் அனுபவித்த அனுபவித்த காலத்திலேயே சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தோற்றம்பெற்று படிப்படியாக உயிர்,பொருள்,இன்னும் எவ்வளவோ தியாகங்களிணை உரமாகவும் நீராகவும் பெற்று பூத்துப் பலன்தர பரிணமித்தது.
கட்சி ஆரம்பமான நாட்களிலிருந்து ஏற்கனவே கட்சிகளின் காலடிகளில் தவங்கிடந்த மேட்டுக்குடியினர் பல்வேறுபட்ட வடிவங்களில் முஸ்லீம் காங்கிரஸினை அழிக்கும் நடவடிக்கையில் தனியாகவும்,கூட்டாகவும் ,பகிரங்கமாகவும்,பரகசியமாகவும் ஈடுபட்டார்கள்.அவற்றை எல்லாம் மீறி வளர்ச்சியடைந்த முஸ்லீம் காங்கிரஸ் ஒருகட்டத்தில் நாட்டின் முக்கிய ஒரு அமைப்பாகவும்,ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகவும் விளங்கியது . எவற்றை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முஸ்லீம் காங்கிரசை வளர்த்தவர்களில் பலர் ,ஏற்கனவே தத்தம் பிரதேச அரசியல்வாதிகளிடம் இருந்து கற்றுக்கொண்ட பழைய வித்தைகளை ,பெற்ற அனுபவங்களை கரைபடியாமலிருந்த முஸ்லீம் காங்கிரசின் பக்கங்களை படிப்படியாக கறையாக்கத்துவங்கினர்.கட்சியின் ஆரம்ப காலத்தல் தோள் கொடுத்தவர்கள்,தியாகங்கள் செய்தவர்கள் என்ற சில காரணங்களை மனதில் கொண்டும் சூடடிக்கும் மாடு வைக்கோல் மேய்வது வழமை இயல்பு என்ற முதுமொளியையும் மனதில் கொண்டு தலைமை அவற்றைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் தட்டிக்கேட்கப்படாமல் விட்டதால் தவறுகள் குட்டிபோட்டு பல்கிப்பெருகி கட்சியின் ஆங்காங்கே காணப்பட்ட பொந்துகளில் பெருச்சாளிகளாக ஒளிந்திருந்தன.தலைவர் இருக்கும்போதே சில சில முரண்பாடுகளுடன் இருந்தவர்கள் ,அவரது அகால மரணத்தின் பின்னர் தத்தம் அடிமனது ஆசைகளின் அசைவுக்கேற்ப ஆடத்துவங்கினர் .அதன் விளைவாக பிரதேசவாதமும் புதுப்புது கட்சிகளும் இலங்கை முஸ்லீம் அரசியலில் முளைத்தன சில தேசிய அரசியலில் கலந்தும்,ஒருசில தேசிய அரசியலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் போயின.ஒரு கூடையிலிருந்த பழங்கள் பலகூடைகளிற்கு பிரிந்தன.அவரவர் கிடைத்ததை அனுபவித்தனர் கிடைக்காதவர் மனம்நொந்து மற்றவரை தாழ்த்திப் பேசுவதிலும் தொடர்ச்சியாக தூற்றுவதிலும் ஈடுபட்டனர்.இதனிடையே முற்றுமுழுக்க அழியாமலிரிந்த மேட்டுக்குடியினரும் மெது மெதுவாகத் தலை தூக்கத்துவன்கினர்.
இந்தப்பிரிவினையில் அதிகம் சந்தோசப்பட்டதும் பலனடைந்ததும் பேரினவாத அரசியல் கட்சிகளே!இந்தப்பிரிவினையை தூண்டிவிட்டதில் அதிக பங்கு சில இலத்திரனியல் ஊடகங்களும்,அவ்வூடகங்களை சேர்ந்த சில நெறிப்படுத்துனர்களுமுடையது.பிளவுகள் அதிகரிக்க கூடிய வினாக்களே அதிகம் தொடுக்கப்பட்டன,நேரடி வாதப்பிரதி வாதங்களும் இடம்பெற்றன.ஒருவரோடொருவர் கை கலப்பில் மட்டுமே ஈடுபடவில்லை.மறைந்த தலைவரின் காலத்தில் கட்டுக்கோப்பாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மேய்ப்பவநில்லாத மந்தைக்கூட்டமாக மீண்டும் மாறத்துவங்கினர்.
கட்சியை சின்னாபின்னப்படாமல் கட்டிக்காக்க இந்நாள் தலைவர் தவறிவிட்டார் என்றே கூற வேண்டும்.தமக்கு வேண்டியவர்களை தோள்தூக்கி விடுவதும் வேண்டாதவர்களாக சிலரை உருவகித்துக்கொண்டு அவர்களை எட்டி உதைப்பவராகவும் இருக்கின்றார் என்று பல கட்சியின் அடிப்படை போராளிகள் கட்சியை விட்டுத்தாம் பிரிந்ததற்கான காரனமாகக்கூருகின்றனர். இவ்வாறான சிதைவு களிற்கு உள்ளன கட்சியிடம் முஸ்லீம் சமூகத்தின் பெருமான்மையினர் தம் சமய சமூக அரசியல்,பொருளாதார த்தின் முன்னேற்றம் பாதுகாப்பு போன்றவற்றை எதிர்பார்த்து நிற்கின்றனர்.ஆனால் உன்மையிலேயே முஸ்லீம் காங்கிரஸ் உட்கட்சிப்பூசலாலும் ,கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய கட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் பிந்தள்ளப்பட்டிருப்பதனால் கிழ சிங்கமாகிவிட்டதுபோல் தோன்றுகின்றது.இந்தக் கிழச்சிங்கம் மற்றயவர்களுடன் போட்டிபோடும் திறனை இழந்து நர்க்கின்றது வெள்ளிடை மலை.
தலை நிமிர்ந்து பேரம்பேசிய முஸ்லீம் காங்கிரஸ் ஏதாவது கிடைத்தால் போதும் என்று போத்திக்கொண்டிருப்பது வாக்காளர்களுக்கும் பொது மக்களுக்கும் பெரிடியாக்கவும் பொறுக்க முடியாததாகவும் இருக்கின்றது.தலைமை,பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளின் சலுகைகளை விட்டுக்கொடுக்க முடியாமலேயே அமைதியாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.அண்மைக்கால பிரச்சினை பற்றி அரசாங்கத்துடன் கண்டிப்பாக பேசக்கூட முடியாத நிலை அவர்களது பலவீனத்தின் வெளிப்பாடு என்றே கூறலாம். மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்ற கோசத்தை முதலீடு செய்தே பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவானார்கள்.அவர்கள் முஸ்லீம் மக்களின் இக்கட்டான நிலையில் எதுவித பலன்தரக்கூடிய ,ஆக்க பூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடாமலிருப்பது ஏற்கனவே பலமுறை மக்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக கட்சி முடிவெடுத்தது என்ற குற்றச்சாட்டில் புழுங்கிக் கொண்டிருக்கின்ற மக்கள் மனத்தில் எரிகின்ற நெருப்பில் ஊற்றிய தீயாக கொழுந்து விட்டெரிகின்றது.
இவ்வாறு பலம் குன்றிப்போய் முஸ்லீம் சமூகம் இருக்கின்ற நிலையை நன்கறிந்து கொண்ட பேரின வாதிகள் பலதசாப்தங்கள் போனாலும் முஸ்லீம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்காதவாறு தாக்குவதற்கு தயாராகி ,அதில் வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் பிரதேசவாதம், கட்சிவாதம், இயக்கம்கொள்கை என்ற பிரிவினைகளை மறந்து ,கருத்து பேதங்களைத் துறந்து ,அரசாங்கத்துடன் ஒருமித்த குரலில் முஸ்லீம்களுக்காக கோசம் எழுப்பக்கொடிய ஒரு தருணத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.எனவே இலங்கை வாழ் அனைத்து அரசியல் பிரமுகர்களும் இவ்விடயத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மிக அவசரமாக ஒன்று படுதல் காலத்தின் தேவை...!
ஒற்றுமையை விருமபவில்லை என்றால் அது சைத்தானிய குணம் ஆகும்! ஏன் எனில் சைத்தானுக்கு எப்போதுமே சமுதாய ஒற்றுமை பிடிக்காது. உடனே தன் எடு பிடிகளைக் கொண்டு ஒற்றுமைக்கு எதிராக பாய ஆரம்பித்து விடுவான்.நீங்கள் முதலில் எல்லாம் ஒன்று பட்டுக் காட்டுங்கள் பார்ப்போம் என சவால் விடுவார்கள்
ReplyDeleteLet's unite under one roof... it is ACJU. Let's make it stronger and they will lead us and guide our politicians according to Islamic way.
ReplyDeleteungal kanavu nanawaaha en piraarthanaihal.
ReplyDelete