Header Ads



சுற்றுலா பயணிகள் விசாவில் பாகிஸ்தான் அடிப்படைவாதிகள் இலங்கை வருகின்றனராம்


(Gtn) பாகிஸ்தானில் செயற்பட்டு வரும் அடிப்படைவாத முஸ்லிம் குழுவுடன் தொடர்புடையவர்கள் சுற்றுலா விசா அனுமதியில் இலங்கைக்கு சென்று, அங்கு தங்கியிருந்து மத அடிப்படைவாதத்தை பிரசாரம் செய்து வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அணுசரனையில் இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இலங்கை சென்று, பாகிஸ்தானில் வசிக்க முடியாது எனக் கூறி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் பதிவு செய்து, இலங்கையில் தங்கியுள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், இவ்வாறு சுற்றுலா விசாவில் இலங்கை சென்று, ஒரு வருடத்திற்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தங்கியிருந்த முஸ்லிம் மத குழுவொன்றை சேர்ந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் இலங்கையில் தஞ்சம் கோரியுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு குடும்பத்துடன் வந்து, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கோரி இலங்கையில் தங்கியிருக்கும் மத குழுக்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் குறிப்பிட்ட சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.  

No comments

Powered by Blogger.