திருகோணமலையில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு - ஹக்கீம் நேரில் ஆய்வு (படங்கள்)
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக இடம் பெற்று வரும் பாதுகாப்பு படையினரின் காணி அபகரிப்பானது புல்மோட்டைப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள நிலையில் புல்மோட்டை மண்கிண்டிமலை,பொன்மலைக்குடா, தேத்தாவடித்தீவு,13ம்,14ம்கட்டை போன்ற பல இடங்களில் தோட்ட மற்றும் பயிர்ச்செய்கைகள் செய்து வந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடற்படை அதிகாரிகள் மக்களுக்கு பணித்திருக்கிறார்கள். மேலும் மக்களின் காணிகளுக்குள் 'இது கடற்படைக்கு சொந்தமான காணியென்றும் அத்துமீறி பிரவேசிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்'; எனவும் மும்மொழிகளும் பெயர்ப்பலகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கடும் அதிருப்தியில் தங்களது காணிகளை இளந்துவிடுவோமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களுக்கு புல்மோட்டையிலுள்ள அணைத்துபள்ளிகளின் தலைவர்களும் ஜம்மியத்துல் உலமாவும் இவ்விடயம் குறித்த அழுத்தங்களை தெரிவித்திருந்தன அதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காணி ஆணையாளரிடம் முறையிட்டதற்கிணங்க உடனடியாக குச்சவெளி பிரதேச செயலாளர்,மாகாண காணி ஆணையாளர்,புல்மோட்டை கடற்படைக்கு பொறுப்பான அதிகாரி,காணித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவொன்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வைத்து கலந்துரையாடல் மேற்கொண்டது. பின்னர் இந்த குழு புல்மோட்டைப்பிரதேசத்துக்கு விஜயம் செய்து நேரடியாக அங்குள்ள நிலமையை விசாரனை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் மாகாண சபை உறுப்பினருக்கும் புல்மோட்டை கடற்படைக்கு பொறுப்பான அதிகாரிக்குமிடையில் கடுமையான விவாதமும் இடம்பெற்றன. இதேவேளை மாகாண காணி ஆணையாளரால் பிரதேச செயலாளரூடாக அப்பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவையாளரை ஒருமாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேண்டியிருந்தார். இதேவேளை மக்களை அதே இடத்தில் இருக்குமாறும் புதிதாக காடு வெட்டி துப்பரவு செய்வதை தற்காலிகமாக தவிர்க்குமாறும் மேற்படி அதிகாரி பணித்துள்ளார்.
மேலும் இக்காணிப்பிரச்சினை தொடர்பாக கௌரவ நீதி அமைச்சரின் கவனத்திற்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் கொண்டு வந்ததன் பின்னர் நேற்று புல்மோட்டைப்பிரதேசத்திற்கு கௌரவ நீதி அமைச்சர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் பொதுமக்கள் மற்றும் பள்ளிகளினுடைய தலைவர்கள்,ஜம்மியத்துல் உலமா தலைவர்,அப்பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலரை புல்மோட்டை பெரிய பள்ளிவாயலில் வைத்து சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய கௌரவ நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதுவிடயம் தொடர்பாக தான் ஜனாதிபதியோடும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பேசி இதற்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் எதிர்வரும் 2013.03.19ம் திகதி கிழக்கு மாகாண சபையில் கௌரவ உறுப்பினர் அன்வர் மூலமாக காணிப்பிரச்சினை தொடர்பான பிரேரனையொன்றும் கொண்டுவரப்பட்டு நிகழ்ச்சி நிரலில் சகல மாகாண சபை உறுப்பினர்களின் கைகளிலும் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஐயோ!
ReplyDeleteஎன்ன அப்பாவிகள் நீங்கள்?
எதுவுமே நடக்காது! இன்னுமா இந்த இயந்திரங்களை நம்புகிறீர்கள்? இவ்வியந்திரங்களின் “றிமோட் கொன்றோல்” அபகரிக்கும் இடத்தில் உள்ளது.
இவர “நம்பி நலஞ்சி” நீந்தி, குழியோடியும்.... ஹ்... ஹ்.... ஒண்டும் நடக்கல்ல! செவிடன் காதில் ஊதிய சங்குதான். .
இவர் இவ்வரசின் நாற்காலியில் இருக்குமட்டும், இந்நாய்க்காலிகளின் அட்டூழியம் தொடரும்! அவர் ஊழியம் அதுதான்.
இப்படியான எடுப்பார் கைப்பிள்ளைத் தலைவர் இருக்கும் வரை முஸ்லிம்களின் அவலமும் தொடரும்.
UNMAYA KARUTHU..
ReplyDeleteஇந்தப் பொடியனுக்கு எது முதலில் எது பிறகு என்று ஒன்டும் விளங்குதில்ல. அடதம்பி முதல்ல உயிர்வாழ்ரதே கேள்விக் குறியாக்கிடத்தகுது இதுக்குள்ள காணிப்பிரச்சின பத்தி கலியானம் பேசிறியல்...............
ReplyDeleteMinister will take action seriously wait dears.
ReplyDelete