Header Ads



புல்மோட்டை முஸ்லிம்களின் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்..!


யுத்தம் காரணமாக 1984ம் ஆண்டு புல்மோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மண்கிண்டிமலை, தேத்தாவாடித்தீவு, வீரந்தீவு, பொன்மலைக்குடா ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அக்கிராமங்களுக்குச் சென்று மீளக்குடியமர முற்பட்டபோது அவர்களுக்கு சொந்தமான காணி, நிலங்களை தமக்கு சொந்தமானதென கடற்படையினர் தெரிவித்ததையடுத்து அக்கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கடல்படையினருக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

இவ்விடயத்தை கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து முதலமைச்சர் பணிமனையில் செவ்வாய்க்கிழமை (19) மாலை விஷேட கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கருத்துதெரிவித்த முதலமைச்சர், காணிக்கச்சேரி மூலம் தெரிவிசெய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ள சகல மக்களுக்கும் அவர்களுக்கு சொந்தமான காணிகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைஎடுக்குமாறு கிழக்குமாகாண காணி ஆணையாளருக்கு உத்தரவுபிறப்பித்தார்.

மேலும், கடல்படையினரால் அபகரிக்கப்பட்ட சகல காணிநிலங்களிலிருந்தும்
அவர்களை மிகவிரைவில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கிழக்குமாகாணசபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி, கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான ஜெமீல், ஆர்.எம் அன்வர், முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் ஆதம்பாவா தௌபீக், கிழக்குமாகாண காணி ஆணையாளர் கே.கே.ஜீ விஜயதிலக, குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன், மற்றும் திருகோணமலை மாவட்ட வனவிலங்கு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

(முதலமைச்சரின் ஊடகப்பிரிவு)

1 comment:

  1. உண்மையா அவர் சொன்னாரா? நம்பவே முடியல. பாப்பம் என்ன நடக்குதெண்டு! கோட்டா VS நஜீப் ஏ மஜீத். ஹுர்ரே... ஏற்கனவே "தூங்கும் முதலமைச்சர்" என்று பட்டப் பெயர் வேறு. ஆளுமை வந்தா எங்களுக்கும் சந்தோசம் தான். நாங்கென்ன ஒங்கள்ல கோபத்திலையா திட்டுறம்?!

    ReplyDelete

Powered by Blogger.