Header Ads



சவூதி அரேபியாவில் சமூக நல்லிணக்கம் பற்றிய மனம்திறந்த சந்திப்பு..!


இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் தவறான கருத்துக்களை ஒரு சில விஷமிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் இந்நிலையில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது கடமையை உரிய முறையில் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். தான் ஏற்றிருக்கும் தூய இஸ்லாம் தனது உயிரை விட மேலானதாகும். அதற்கு ஒரு கலங்கம் ஏற்படும் போது ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருப்பானென்றால் அவன் தன்னிடம் உண்மையில் ஈமான் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

அந்த விஷமிகள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக பரப்பும் கருத்துக்கள் எவை என்பதை உரிய முறையில் இணங்கண்டு அவற்றுக்குரிய மறுப்புகளை உடனுக்குடன் வழங்குவதுடன், அது சிங்கள சமூகத்தை சென்றடையவும் வழி வகை செய்ய வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன:

அவற்றில் ஒன்றாகத் தான், சமூக நல்லிணக்க மனம் திறந்த சந்திப்புகளை ஏற்பாடு செய்வது. அதனூடாக அவர்களிடம் உள்ள தப்பபிப்ராயங்களை களையலாம், இஸ்லாம் ஏனைய சமூகங்களுடன் எவ்வாறான உயரிய பண்பாடுகளை கடைபிடிக்குமாறு சொல்கின்றது, அல்லாஹ்வின் தூதர் அதற்கு எவ்வாறெல்லாம் வழிகாட்டினார்கள் போன்ற விடயங்களை தெளிவு படுத்த முடியும்.

 அந்த வகையில் நாம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை 2013- 03- 29 ஸவுதி அரேபியாவின் கிழக்கு மாகானத்தில் அமைந்திருக்கும் அல்கொபார் நகரத்தில் சமூக நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளில் ஒரு மனம் திறந்த சந்திப்பை சிங்கள, தமிழ் மொழிகளில் ஏற்பாடு செய்திருக்கின்றோம். அல்கொபாரில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் அல்ல, அதை சூழவுள்ள நகரங்கள் தம்மாம், அல்ஜுபைல், அல் அஹ்ஸா போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் இதில் கலந்துகொள்ளுமாறு நாம் அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

இவ்வாறான நிகழ்ச்சிகளை உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஏற்பாடு செய்வது காலத்தின் கட்டயமாகும். நமது பொறுப்புகளை உரிய முறையில் நாம் நிறைவேற்றும் பொதுதான் அல்லாஹ்வின் உதவி நமக்கு வரும், நாம் ஒரு எட்டையும் முன் வைக்காமல் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்ப்பது வெறும் ஏமாற்மறமாகும். அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்" (முஹம்மத் 47: 7).

அன்புடன்

அஸ்ஹர் ஸீலானி



2 comments:

  1. nalla vidayam carry on. mudiyumaayin video social networkil publish pannavum.

    ReplyDelete

Powered by Blogger.