Header Ads



காலியில் முஸ்லிம் இளைஞர் வெட்டிக்கொலை


(ISBAHAN SHARFDEEN) காலி, ஹிரிம்புர பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் வாள்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நேற்று இரவு 8.30 மணி அளவில் ஆயுதங்களுடன் வந்த சிலர் இவரை தாருமாறாக வெட்டிய நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

வெட்டுக்காயங்களுடன் கராபிடிய வைத்தியசாலையின் அவசர பிரவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த இவர் அதிகாலை 4.10 அளவில் மௌத்தாகியுள்ளர்.

காலி-ஹிரிம்புரை யை சேர்ந்த 34 வயதுடைய நிசார் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இரு முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு மத்தியில் காணப்பட்ட முறுகலே இதற்கு காரணமென பிரதேச வாசிகள் தெரிவித்தனர். இருப்பினும், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

1 comment:

  1. அந்நியர்கள் எமக்கெதிராகத் திட்டம் தீட்டி எம்மைக் கருவறுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாமே வேறுபட்டால்????

    ReplyDelete

Powered by Blogger.