Header Ads



உலகில் எங்கிருந்து ஏவுகனை ஏவப்பட்டாலும் அமெரிக்காவை செயற்கைகோள் காப்பாற்றுமா?



உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை, அமெரிக்கா,விண்ணில் செலுத்தியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வல்லரசு நாடுகளும், வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளன. அவற்றை எப்போது ஏவினாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை அமெரிக்கா தயாரித்தது. 

அமெரிக்காவின், புளோரிடா பகுதியிலுள்ள கேப் கெனவரெல் ஏவுதளத்தில் இருந்து, "ஜியோ-2' என, பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், "அட்லஸ்-5' ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்டது. அகசிவப்பு கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த செயற்கைக்கோள், உலகின் எந்த பகுதியில் இருந்தும்,எதிரி நாட்டு மீது ஏவுகணை ஏவப்பட்டால், உடனடியாக அது குறித்து, அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும். ஏற்கனவே, "ஜியோ-1' என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும், 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது.

1 comment:

  1. technology of fahilroyal russia china north korea and iran sensor laser is available

    ReplyDelete

Powered by Blogger.