''சர்வதேச அணுசக்தி மாபியாக்களின் பிடியில் இலங்கை சிக்கிவிட்டது''
இந்தியா - கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் ஏற்படவிருக்கும் அழிவினைத் தடுப்பதற்கு எமது அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. சர்வதேச அணுசக்தி மாபியாக்களின் பிடியில் சிக்கியுள்ள அரசாங்கம், இலங்கையிலும் அணு மின் நிலையங்களை உருவாக்குவதற்கு முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்திர காரியவசம் குற்றம் சாட்டினார்.
கொழும்பு 2 இல் அமைந்துள்ள நிப்போன் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம் இலங்கைக்கு மிக அண்மையில் காணப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த அணு உலையினைக் கட்டக் கூடாதென்றும் இவ்வணுவுலை தனது பணி நடவடிக்கையினை ஆரம்பித்தால் அணுக்கதிர் வீச்சில் இந்தியாவின் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை பாதிப்புள்ளாகும் என்ற கருத்துக்களுடன் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த வருடம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியத்தை நிரப்பப் போவதாவும் அணுஉலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாகவும் மத்திய அரசாங்கம் அறிவித்தன் பின்னர் மக்கள் போராட்டங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.
அதன் பின்னர் மத்திய அரசாங்கம் இரகசியமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியத்தை நிரப்பியதால் தமிழ்நாட்டின் கடற்கரையை அண்டியபகுதிகளிலும் இந்திய, இலங்கைக் கடற்பரப்பிலும் இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும் கதிர்வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடங்குளத்து கதிர்வீச்சு வெளியாகியுள்ளமை தொடர்பான விமர்சனங்களை இந்திய மத்திய அரசாங்கம் புறக்கணித்துவந்துள்ள அதேவேளை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
Advice the Indian government to demolish/destroy the whole Island not only the part of the Island
ReplyDelete