Header Ads



மாட்டுத்தொழுவம் நீக்கப்பட்டமையும், ரஊப் ஹக்கீமின் மௌனமும் கண்டிக்கத்தக்கது


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டியில் 148 வருடங்களாக இருந்த மாட்டுத்தொழுவம் நீக்கப்பட்டமை அமைச்சர் ஹக்கீமின் கையாலாகா தன்மையை காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. 

இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தொவித்ததாவது,

கண்டியில் இருந்த மாட்டுத்தொழுவம், சுற்றாடலுக்கு கேடு என்பதை வைத்து அகற்றப்பட்டிருக்குமானால் அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் மக்களை நாசமாக்கும் சாராயத்தவறணைகள் பரவலாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கண்டியில் முஸ்லிம் மக்களுக்கெதிரான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மேற்படி மாட்டுத்தொழுவம் நீக்கப்பட்டமையும் அதுபற்றிய ரஊப் ஹக்கீமின் மௌனமும் கண்டிக்கத்தக்கதாகும். 

இந்த நாட்டு முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்குகளை பெற்ற கட்சியின் தலைவரது மாவட்டத்தில் மாட்டுத்தொழுவம் ஒன்றுக்கு 148 வருடங்களாக இருந்த உரிமை நீக்கப்பட்டுள்ளமையின் மூலம் பதவிகளுக்கு சோரம் போய்விட்ட முஸ்லிம் காங்கிரசின் அடிமைத்தனமான அரசியல் நிலைப்பாடு வெளிக்கொணரப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு தலைவரால் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் கௌரவத்தை காப்பாற்ற முடியுமா என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டும். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் ஏனைய தலையாட்டி பொம்மைகளான முஸ்லிம் கட்சிகளையும் பாராளுமன்றத்தில் வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் ஒவ்வொரு உரிமையையும் நீக்கிக்கொண்டிருக்கிறது. கடைசியில் முஸ்லிம் அமைச்சர்கள் நக்கிக்கொண்டிருக்கும்  எலும்புத்துண்டுகளுக்கும் ஆபத்து வரும் என்பதை இங்கு நாம் சொல்லி வைக்கிறோம். 

4 comments:

  1. இவை கலியுகத்தில் இருந்து சத்திய யுகம் பிறப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.

    உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்க.

    பசு வதையை தடைசெய்வோம்

    ReplyDelete
  2. கண்ணியமிக்க முபாறக் மெளலவி அவர்களே, கண்டியின் நிலைமை புரியாமல் வேறுபிரதேசத்திலிருந்து பேசுகிறீர்கள். கண்டியின் மானகரசபையின் முடிவு உங்கலுக்கு தெரியாதா? இருந்த கடைளுக்குத்தான் தான் தட்டை. இதில் தொழுவம் என்ன தொழில் என்ன? விடயம் புரியாமல் இந்த விடயத்தில் உங்கள் சின்னத்தனமான பத்திரிகை அறிக்கை அரசியலை செய்யவேன்டாம். உலமாக்களே இப்படி தண்ணிக்கும் தவிட்டுக்கும் இளுத்தால் முஸ்லீம்களின் உரிமைகளுக்கு எங்குபோவது. உலமா சபையிடமிடருந்து நீங்கள் அதிகம் க‌ற்றுக்கொள்ள வேன்டியிருக்கிறது. உலமாவும் அரசியல்வாதியும் இந்தவிடயத்தில் முட்டிக்கோள்ள முடியாது. நிதானம் உங்களுக்கு தேவை.

    ReplyDelete
  3. Dear viveka aananthan,

    What do you mean by Pasu vathai? Tell me some thing.

    ReplyDelete
  4. முபாரக் சாப், BBS பிரச்சினையில் நீங்களும் நல்லாத்தான் மீன் புடிக்கிறீங்க. சூபர்...

    ReplyDelete

Powered by Blogger.