புத்தளம் பெரிய பள்ளிவாசலில் பிற சமூகங்களுடனான நல்லுறவு குறித்து கலந்துரையாடல்
(அபூ நாதில்)
புத்தளம் மாவட்டத்தில் வாழும் பிற சமூகங்களுடன் முஸ்லிம்கள் நல்லுறவைப் பேணுவதை நோக்காக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் தொடர்பான விளக்கக் கூட்டமொன்று நேற்று இஷா தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெற்றது. புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் இந்த கூட்டம் இடம் பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடல் இம்மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் புத்தளம் மாவட்டதிலுள்ள பல பிரதேசங்களிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
Post a Comment