மட்டக்களப்பில் அடை மழை – தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் (படங்கள் இணைப்பு)
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை வழமை நிலைக்குத்திரும்பி வெள்ளம் வடிந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் மிகநீண்ட நாளைக்குப் பின்னர் நேற்றிரவிலிருந்து மீண்டும் அடை மழை பெய்துவருவதால் தாழ் நிலப்பிரதேசங்களில் மீண்டும் வெள்ளஅபாயம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றிரவு 03.02.2013 இரவு 10.00 மணி தொடக்கம் அடை மழை பெய்துவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்புஇ காத்தான்குடிஇபுதிய காத்தான்குடிஇஏத்துக்கால்இகர்பலாஇபாலமுனைஇகிரான்இகல்லாறுஇபெரிய கல்லாறுஇதுறைநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்யும் தொழிலாளிகளும் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.
Post a Comment