இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் நாளை வாக்கெடுப்பு
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 31 நாடுகளின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானம் மீது வாக்கெடுப்பைக் கோருவதற்கு இலங்கை முடிவு செய்துள்ளது.
இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து, இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கோரி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
'இலங்கையின் நிலைமைகளை சமமற்ற வகையில் நோக்கும் இந்தத் தீர்மானம், இலங்கையை இழிவுபடுத்தும் வகையிலும் தனிமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை நம்புகிறது. தற்போதைய நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானம், நாட்டை அவமானப்படுத்தி உதவியற்றநிலைக்குத் தள்ளக்கூடியது. கடினமான வெற்றி கொள்ளப்பட்ட அமைதியை சீர்குலைக்க முனைபவர்களைத் தவிரவேறு எவரும் இதன் மூலம் பயனடையப் போவதில்லை. அத்துடன், பக்கசார்பான, அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்த அமெரிக்கத் தீர்மானம் ஏனைய நாடுகளுக்கும் ஆபத்தானது.
இலங்கை அரசாங்கம் கடந்த முறை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோலவே புதிய தீர்மானத்தையும் நிராகரித்துள்ளது. இந்தத் தீர்மான வரைவு வரும் 21ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் போது, அதன் மீது வாக்கெடுப்பு நடத்த 'இலங்கை கோரும்.
இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க உறுப்புநாடுகளின் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment