Header Ads



முஸ்லீம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு..!


(அஸ்ரப் ஏ சமத்)

அம்பாறையில்   மார்ச் 23-30 திகதி நடைபெறும் தயட்டகிருல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்சவை   அக்கரைப்பற்றின் நுரைச்சோலையிற்குச் அழைத்துச் சென்று சவுதி அரசாங்கம் 2009ல் நன்கொடையாக நிர்மாணித்த 500 வீடுகளையும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு  பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகின்றனர்.

மேற்கண்ட விடயமாக முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அம்பாறை மாவட்டத்தின் கறையோரபிரதேச பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு 8 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பினர் முஸ்லீம் அமைச்சர்களுக்கும் அம்பாறைமாடவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முகவரியிட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. 

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது இலங்கையில் ஆகக் கூடுதலான உயிர் உடமை இழப்புக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதொரு மாவட்டம்  அம்பாறை மாவட்டமாகும். இம் மாவட்ட பாதிக்கப்ட்ட மக்கள் தற்பொழுதும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். 

இம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் சவுதி அரசின் காலம்சென்ற இளவரசர் நைப் அவர்களை 2005ம் ஆண்டு  மக்காவில்  சந்தித்தார். அச் சமயத்தில் பேரியல் அஸ்றப்  அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் முஸ்லிம்களின்  உயிர் உடைமைகள் அழிவுகள் பற்றிய  திட்ட அறிக்கையொன்றையும்    சவுதி இளவரசர் னைபிடம் சமர்ப்பித்தார். இதன் பயணாக இளவரசர் சவுதி சரட்டபிள் நிறுவன அதிகாரிகளைக் தொடர்புகொண்டு  இந்தோனேசியா நாட்டில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தயார் படுத்திய ஹிங் அப்துல் அசீஷ் வீடமைப்புத்திட்டத்திட்டத்தினை இடை நிறுத்தி இத்திட்டத்தினை இலங்கைக்க வழங்கும் படி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அந்த வகையில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 50 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு சொந்தமாண காணிகளை ஹிங்குராணை சீனிதொழிற்சாலைத்திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டது. அக் காணிகளையே முன்னர்ள அமைச்சர் பேரியல் அஸ்ரப் அடையாளம் கண்டு  இத் திட்டததினை இங்கு நிர்மாணிப்பதற்கு வழிவகுத்து கொடுத்தார். இத் திட்டத்தில் 500 வீடுகள், வைத்தியசாலை பாடசாலை, பள்ளிவாசல் சனசமுக நிலையம், போன்றவைகள் நிர்மாணிக்கப்பட்டடுள்ளது. இத் திட்டம் பூரணப்படுத்தப்பட்டு   3 வருடங்களாகிவிட்டது.  சகல நிர்மாணங்களும்  பாழடைந்து நிர்மாணங்கள் மற்றும் வீடுகளும் இடிந்து விழும் அளவுக்கு  சேதமடைந்துள்ளது.  

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் மருதமுனை, சாய்ந்தமருது மாளிகைக்காடு கல்முனைக்குடி ஒழுவில் பாலமுனை  போன்ற  பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்க காணி இண்மையால் இத்திட்டம் அக்கரைப்பற்று- அம்பாறை வீதியில்  அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.

2011ல் சிகல உறுமய கட்சி  இத்திட்டத்திற்கு எதிராகவும் இக் காணி தீகவாபி பிரதேசத்தை அண்டிய பிரதேசம்  இதில் வீடுகளை நிர்மாணித்து முஸ்லீம்களை குடியேற்றும் திட்டத்தினை மறைந்த அஸ்ரப் முன்னெடுத்த திட்டத்தினை பேரியல் அஸ்ரபும் முன்னெடுக்கின்றார்.  என   உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இத் திட்டத்தினை முஸ்லீம்களுக்கு மட்டும் பகிர்ந்தளிக்க முடியாமல் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இத் திட்டத்தினை பகிர்ந்தளிக்கும்போது சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களை அம்பாறை மாவட்டத்தில்  அடையாளம் கண்டு அரச சட்ட மன்றம்  ஊடாகவும் அம்பாறை அரச அதிபர் அக்கரைப்பற்று பிரதேச செயலாhள் பிரிவுகள்  இணைந்து  இவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்திருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.

அரசின் பங்காளி கட்சியாக முஸ்லீம் காங்கிரஸ் உள்ளது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அத்துடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர்.  அதே போன்ற அமைச்சரவையில் அமைச்சர்கள் றவுப் ஹக்கீம் ஏ.எல்.எம்  அதவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுத்தீன், சிரேஸ்ட்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி பசீர் சேகுதாவுத்  ஆகியோர்கள் உள்ளனர். இவ் அரசியல் வாதிகள் இதுவரையிலும் இவ் வீடமைப்பு திட்டம் பற்றி ஜனாதிபதியிடமோ அல்லது தமது அமைச்சரவையிலோ கலந்து ஆலோசிக்கவும்மில்லை.  

மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப், முன்னாள்  அமைச்சர் பேரியல் அஸ்ரப் ஆகியோர்  செய்த அபிவிருத்திச்  சேவைகளில் 5வீதமேனும் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இப் பிரதேசத்திற்கு கடந்த 3 வருடங்களாக எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்கவில்லையெனவும் பாதிகக்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஆகவே தயட்ட கிருல்லைக்கு வரும் ஐனாதிபதி அழைத்து ;இத்திட்டத்தினை காண்பித்து ஆகக் குறைந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகளை நிர்மாணித்து தரவிட்டாலும்  சவுதி அரசின் தனவந்தர்கள் தமது வருடாந்த தர்ம நிதியினை சேகரித்து மணிதபிமான உதவித்திட்டத்தின் கீழ் அளித்த இவ் வீடமைப்புத் திட்டததினை பெற்றுத் தரும்படி சம்பந்தப்பட்டவர்களை கேட்கின்றனர்.   

4 comments:

  1. இந்த வேன்டுகோளை அவர்கள் நிறவெற்றபோவ‌தில்லை. தயட்ட குருல்ல நிகழ்வுக்கு இதை நன்றாக திட்ட‌மிட்டிருக்கமுடியும். இதற்குரிய நேர்முகப்பரீட்சைகள் அக்கரைபற்றில் நடந்த்தாக அறிகிறொம். அனால், முடிவானதாக தெரியாது. அதைவிட இதுதொடர்பான அபிவிருத்திகளும் முஸ்லீம் பிரதேசங்களில் கதையளவிலெ உன்டு.இன்று நாட்டில் முஸ்லீம்களுகெதிராக இருக்கும் அசாதாரன நிலையையும் கருத்தில் கொன்டு அம்பாரையில் நடக்கும் நிகழ்வை நாம் எல்லோரும் பகிஷ்கரிப்பதெ சிறந்தது. எமது பென்களும் செல்லமுட்பட்டு ஏதாவது பிழையாக நடந்துவிட்டால் யாரிடம் முறைப்படுவது? இதுபற்றி நாம் மேலும் அலசிஆராயவேன்டீருக்கிறது, பேசுங்கள். முடிவுசெய்வோம்

    ReplyDelete
  2. அப்படித்தான் 500 வீடுகளை ஜனாதிபதி தந்தாலும், அரசியல்வாதிகள் 50 ஐ ஆவது மக்களுக்கு தருவாங்களா?
    அதையும் அவங்க எடுத்தா நல்லாயிருக்குமே என்று நினைக்க மாட்டாங்களா? அப்படிண்டா சரி,,,.

    ReplyDelete
  3. புண்ணிய பூமி புண்ணிய பூமி என்று சொல்லி நாட்டின் பல பகுதிகளிலும் காணிகளை அபகரிப்பதை உடனே நிறுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளினாடுகள் கட்டித்தந்த வீடுகளை உரியவர்களிடம் கையளி நீங்கள் உங்களுக்காக நாட்டுமக்களின் இரத்தங்களை பிழிந்து அதைக்காசக மாற்றி நீங்கள் ஒவ்வொருவரும் உமது கணக்குகளில் பதுக்கி வைத்தது போதும் மக்களும் வாழட்டும் விட்டுக்கொடு இது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமான தகவல்.

    ReplyDelete
  4. Tackle it carefully protect our live first DO not believe police officers BBS may do some wrongs

    ReplyDelete

Powered by Blogger.