கிண்ணியாவில் தேசிய கல்விக் கல்லூரி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்
(அபூ அஹ்ராஸ்)
பாடசாலை சமூக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி மாணவ மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் கிண்ணியா நகரசபை முன்றலில் நேற்று இடம்பெற்றது.
புரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களை தெளிவுபடுத்தும் ஒரு கட்டமாக கிண்ணியாவில் செயற்படுத்திவரும் டெங்கு பரவல், சூழலை சுத்தமாக வைத்திருத்தல், சகல தேவைகளிலும் சுத்தத்தை பேணுதல், கழிவுகள் சம்பந்தமாக பேணுதலாக இருத்தல், சிறுவர் கல்வி உரிமை சம்பந்தமான விடயங்கள் உள்ளடங்களாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி மாணவர்களால் நேற்று கிண்ணியா நகரசபை முன்றலில் டெங்கு விழிப்புணர்வு நாடகம், துண்டுப்பிரசும் மற்றும் அறிவித்தல்கள் அம்மாணவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, உதவி வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கிண்ணியா நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.
Post a Comment