Header Ads



பிறை எப்.எம் வானொலியின் விளக்கம்


வைக்கோற் பட்டறை மிருகம்... எனும் தலைப்பில் சிபான் பீ.எம் என்பவரினால் நேற்று 25ம் திகதி திங்கட்கிழமை ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் பதியப்பட்டிருந்த செய்திக்கான உண்மைத் தன்மையை, அக்கரைப்பற்றில் இயங்கும் பிறை எப்.எம் வானொலியின் நிருவாகம் விளக்கியுள்ளது.

(எஸ்.அன்சப் இலாஹி)

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வானொலிகளில் ஒன்றுதான் அக்கரைப்பற்றில் இயங்கும் பிறை எப்.எம். ஆகும். இந்த பிராந்திய வானொலி இப்பிரதேசத்தின் மத, கலை, கலாசாரங்களை பேணி தனது சேவையை நடாத்திவருகிறமையை இவ் வானொலி கேட்கும் நேயர்கள் அறிவார்கள். இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட செய்தியை எழுதியவர் ஓர் கல்விமானுடைய இதயக் குமுறலையே கொண்டுவந்ததாக சொல்லியிருக்கிறார். ஊடகத்தர்மத்தினை பற்றியும் கூறியுள்ளார்.

ஊடக தர்மம் என்றால் என்ன என்பதனை இரண்டு நபர்களும் முதலில் கற்றுக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒரு செய்தியை எழுதும்போது அந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பின்புதான் அதனை ஊடகங்களுக்கு எழுதி அனுப்பவேண்டுமே தவிர ஓர் கல்வி மான் கூறினார் என்பதற்காக பிழையான தகவல் உண்மையாகிவிடமுடியாது. பிழையான தகவல்களை வழங்கி ஒரு நிறுவனத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கெட்;ட பெயரை உருவாக்கியுள்ளார்.

பிறை எப்.எம் வானொலி தினமும் காலை 05.45க்கு ஆரம்பித்து காலை 08.00மணிவரை நிகழ்ச்சிகளை வழங்கும் அதன் பின்னர் காலை 08.00மணியிலிருந்து 10.00மணிவரை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். இந் நிகழ்ச்சி கொழும்பிலிருந்து வழங்கப்படுவதாகும். மீண்டும் காலை 10.00மணியிலிருந்து இரவு 07.00மணிவரை பிறை எப்.எம் இன் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி 07.00மணிக்கு பிறை எப்.எம் இன் ஒலிபரப்புகள் நிறைவடையும். இதற்கு இடையே மூன்று பிரதான செய்திகளும் கொழும்பிலிருந்தே ஒலிபரப்பாகிறது இதற்கும் பிறை எப்.எம் க்கும் சம்மந்தம் இல்லை. இதற்குப் பின்னர் 07.00மணியிலிருந்து இரவு 11.30வரை ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும் பிறை எப்.எம் க்கும் எதுவித தொடர்புமில்லை அவை அனைத்தும் கொழும்பிலிருந்தே ஒலிபரப்பாகிறது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ் உண்மைத்தன்மையை செய்தி எழுதுபவர் தெரியாவிட்டால் தெரிந்தவரிடம் கேட்டறிந்து எழுதியிருக்கவேண்டும். 'சிபான்' நிறைய கற்கவேண்டும், வீதியால் செல்லும் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவார்கள் அதனை கேட்டு செய்தி எழுதுவது இதுதான் இறுதியாகக் கொள்ளுங்கள். 'வைக்கோல் பட்டறை  நாய் போன்று செயற்பட்டு' மற்றும் 'பளிங்குக் கடையில் பைத்தியம் பிடித்த எருது போல்' மிகக் கேவலமான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளமை இவரின் கல்வித்தரம் அல்லது அறிவு என்பனவற்றில் குறைபாடுகளையே காட்டுகிறது. அப்படியானவர்கள்தான் இப்படியான பிரயோகங்களை பயன்படுத்துவார்கள். குறைபாடுகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். 

எனவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வைத்து வாசகர்களாகிய நீங்கள் சரி எவை? பிழை எவை? உண்மை என்ன? என்பதனை அறிந்து கொள்ளுங்கள். என்றும் பிறை எப்.எம். தனது பக்கத்தை விளக்கியுள்ளது.

7 comments:

  1. பிறை எப் எம் ஒரு சமூக வானொலி என்று யாருமே கணக்கில் எடுப்பதில்லை, ஏனென்றால் அது அதாவுல்லாவின் பிரச்சார மேடை மட்டும்தான்..(இதில் பணிபுரியும் அனைவரும் அதா "வல்லாவின்" நன்றியுள்ள சேவகர்கள்) இது அனைவருமே அறிந்த விடயம்.. உண்மையை உரைக்கசொன்னால் சிலருக்கு கசப்பாகத்தான் இருக்கும்..

    இன்று இலங்கையில் இருக்கும் அணைத்து ஊடகங்களும் Jaffna Muslim இடம் இருந்து ஊடக தர்மம் என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. நான்கு வசனம் எழுதத் தெரிந்து விட்டால் கண்மண், கால தேச, வர்த்தமானங்கள் புரியாமல் எழுதுவதும பின்னூட்டமிடுவதும் வழக்கமாகி விட்டது. அரசியல் முதல் கொண்டு சமூக விடயங்கள் வரை வெறும் உணர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துப் பலர் அவ்வப்போது தங்களது கோபத்தை வடித்துக் கொள்கிறார்கள். கருத்துத் தெரிவிக்குமுன் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று சிந்திக்கத் தெரியாதவன் சமூகத்திலும் பொதுத் தளத்திலும் கருத்துச் சொல்ல முற்பட்டால் விளைவு இப்படித்தான் இருக்கும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பிறை எப்.எம்.மில் கடமை புரியும் சகோதரர்கள் மீதான பொறாமை. வெறும் உணர்ச்சியிலும் பொறாமையிலும் தங்களது அறிவை இழந்தவர்களது செய்லபாடுகள் இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  3. இதனை படித்ததும் தெறிந்து கொண்டேன்..
    வைத்தியரை யார் சந்திக்க வேண்டுமென்று......

    ReplyDelete
  4. லண்டன் பி.பி.சி. செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
    "வைக்கோற் பட்டறை மிருகம் " என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்ட கடுரைக்கு பிறை எப்.எம் வானொலியின் விளக்கம் என்னும் பெயரில் செவ்வாய் கிழமை அதாவது இன்று ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்துக்கு எஸ். அன்சப் இலாஹி என்பவரால் எழுதப்பட்ட விளக்கத்துக்கான தெளிவு .
    மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நடந்த மிகவும் பாரதூரமான அநீதியை நான் வெளிக்கொணர முனைந்திருந்தது உண்மை தான். இதற்குண்டான தகவலை, தினமும் லண்டன் பி.பி.சி. கேட்கும் குறிப்பிட்ட கல்விமான் தந்ததும் உண்மைதான். இதன் நிலை இவ்வாறு இருக்க ஆனைக்கும் அடி சறுக்குவது வழமை அதன் விளைவால் அவர் பிறை எப்.எம் தான் குறுக்கிடுகின்றது என்று கூட சொல்லியிருக்கலாம். ஒரே அலைவரிசையிலே செயற்படும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , பிறை எப்.எம் போன்றன லண்டன் பி.பி.சி.செய்திகளை ஒலிபரபுவதனால்அவர் மேற்குறிப்பிட்டவாறு சொல்லி இருந்திருக்கலாம். அதனை நான் எழுத்துருவில் கொண்டு வந்ததும் 100 வீதம் உண்மை. அதன் உண்மை நிலை இவ்வாறிருக்க பிறை எப்.எம் க்கு அபகீர்த்தி ஏற்பட்டு விட்டது என தாங்களும் வாசகர்களும் நினைத்தால் அதற்காக நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கின்றேன்.
    இருந்தாலும் நான் இங்கு சுட்டிக்காட்டிய விடயம் சம்மந்தமாக சகோதரர் எஸ்.அன்சப் இலாஹி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் இரண்டாவது பந்தியிலே முழுப் பூசணியை மாத்திரம் அல்ல முழுப் பலாப்பழத்தையே சோற்றில் மறைத்து வெளியிடப் பட்டிருக்கின்றது. இருப்பினும் அவர் 7.00 மணியி இருந்து 11.30 வரை ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் கொழும்பில் இருந்தே ஒலிபரப்பாகின்றது.மற்றும் செய்திகளும் அவ்வாறே ஒலிபரப்பாகின்றது என்று மூன்றாவது பந்தியில் ஒத்துக்கொண்டதோடு நாங்கள் ஒரு கேலிக்கை ஊடகம் மாத்திரமே என்பதனையும் நழுவல் போக்கில் சொல்லியிருக்கிறார். இவ்வாறான ஒரு செய்தி படித்தவர்களுக்கும் பாமரருக்கும் இன்றிலிருந்து அறியக்கிடைத்ததை இட்டு நான் சகோதரருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
    நீங்கள் அரச ஊடக வாதிகள் உண்மை நிலையினை அறிந்த பின்பு தான் மக்களுக்கு தகவல்களை வழங்குகின்றீர்கள் என்பதற்கு சாட்சி செய்திகளை கேட்டு , பார்த்து மகிழும் மக்களே.
    இங்கு வெளியிடப் பட்டிருக்கின்ற காரசாரமான வார்த்தை பிரயோகங்கள் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையே அன்றி உங்களை புண்படுத்திப் பார்க்கும் நோக்கம் எனக்கு கொஞ்சமும் கிடையாது.
    மேலும் கல்வியறிவு சம்மந்தமாக குறிப்பிடிருக்கும் தாங்கள் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியமாகத் தொழிற்படாது பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியராக தொழிற்பட்டு சமூகத்தினை காத்திட துணை நிற்க வேண்டும் எனவும் அன்பாக வேண்டுகின்றேன்.
    யார் வைத்தியசாலை செல்ல வேண்டும் என்பதனை வாசகர்களே தீர்மானிக்க வேண்டும். காரசாரமாக மறுப்புக்களை வெளியிடுவதன் மூலம் உண்மையை எப்போதும் பொய் ஆகிவிட முடியாது.
    shifaanBM

    ReplyDelete
  5. நம்மிடையே உள்ள மிகவும் சிலசகோதரங்களின் மோசமான பண்பு இதுதான். எதையும் நம் சமுகத்தினருடையது என்று பார்ப்பதில்லை. எப்படியெல்லாம் பிரித்துப்பார்க்கவேண்டுமோ அப்படியெல்லாம் பிரித்துப்பார்த்து நாம் நமக்குள்ளேயே கருத்துவேறுபாடுகளில் மோதிக்கொள்வதுதான் தற்காலத்துக்கு மிகவும் அவசியம். சகோதர் இம்றான் Imran. பிறை எப். எம். அதாவுல்லாவின் தேவைக்காக திறந்துவைக்கப்பட்டதுமல்ல, அவருடைய கருத்துகளை எடுத்துச்சொல்வதற்காக ஒருபோதும் பயன் படுத்தப்படவுமில்லை. இது யார் மூலமாக கொண்டுவரப்பட்டது என்பதை நான் உமக்கு சொல்லிக்காட்டவேண்டிய அவசியமும் இல்லை கண்டிப்புடன் நான் சொல்லவிருப்புவது என்னவெண்றால். இதுபோன்ற சந்தர்ப்பங்களின் இம்றான் போன்றவர்கள் தமது பொறாமைத்தனத்தை கொஞ்சம் அடக்கிவாசித்து முஸ்லிம்களிடையே பிரச்சினைக்கு வழிபண்ணும் செய்த்தானுடைய வேலைகளுக்கு அடிமையாகிவிடவேண்டாம், ஏனென்றால் தற்போது இனவெறியர்களுக்கு நம்மிடமிருந்து என்ன தவறுகள் உள்ளன என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள், இத்தருணத்தில் நாமே நமக்குள் தேவையில்லாமல் பிரச்சினைகளுக்கு வழிகளை உண்டாக்கவேண்டாம். அவரவர் ஊரை முன்னேறுவதற்கு அவரவர் தனிப்பட்டமுயற்சியிலேயோ கூட்டு முயற்சியொ செய்யுங்கள் இதையாரும் வேண்டமென்று தடுப்பதில்லை ஆனால் நமக்குள்ளேயே பொறாமைப்படுவது மிகவும் கவலைக்குரியதும் மிக மிக கேவலமானதுமாகும். ஆகவே இறைவனுக்காக இப்படிப்பட்டவர்கள் Comments பண்ணாமல் இருப்பதுவும் மற்ற இணையங்களனூடாக தவறான தகவலகளைப்பரிமாறாமல் இருப்பது மிகவும் நல்லது.

    ReplyDelete
  6. mr. shihabdeen muthlil sonthap puththiya paviththu valap palakunge ugkel brother pokum pakkemthan neegkalum poveerkala - 'ithu manthaik kooddaththin thanmai' enpathu ugkalukku theriyuma vaal pidippatharkkum niyayam vendum

    ReplyDelete
  7. @ Renees, இங்கு பொறாமை படுவதற்கு தகுதியாக என்ன இருக்கிறது?

    நீங்கள் கூறுவது போன்று பிறை எப் எம் யாரால் என்ன நோக்கத்திற்காக யாரால் திறந்து வைக்கப்பட்டதோ, அவை அத்தனையும் இன்று தலைகீழாக மாறிவிட்டது..

    தேர்தல் காலங்களில் என்ன நிகழ்ச்சி இருக்கோ இல்லையோ ஆனால் கட்டாயம் அதவுல்லா நடாத்தும் பாட்டுக்கச்சேரி, மேடை நாடகம் என்பன கட்டாயம் இருக்கும். இது அனைவருக்குமே நன்கு தெரிந்த விடயம்.. இதுவா ஒரு சமூக வானொலியின் சேவை?

    நீங்கள் கூறுவது போன்று சமூகத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் உங்களைப்போன்றவர்கல்தான், நீங்கள்தான் முதுகெலும்பில்லாத, கோழைத்தனமான, சமூக அக்கறையில்லாத அரசியல்வாதிகளை உருவாக்குவது மட்டுமல்லாது அவர்களுக்காக வக்காலத்தும் வாங்குகின்றீர்கள்.. இதற்க்கெல்லாம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்..

    இன்று பாராளுமன்றத்தில் எந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் முஸ்லிம்களுடைய பிரச்சினை பற்றி பேசியதுண்டா? அப்படி யாராவது பேசினால் "இவர் இனவாதம் பேசுகிறார் என்று இன்னொரு முஸ்லிம் அரசியல்வாதியே வெட்கம் இல்லாமல் கூறுவார்" இப்படிப்பட்ட கோலைகலை பார்த்தா பொறாமைப்படுவது?

    சமூகத்தை காட்டிக்கொடுத்து அதன் மூலம் செய்யும் அபிவிருத்தி யாருக்கு வேண்டும்? இவ்வாறுதான் பிரதேசவாதம் பேசி பேசி ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, கடைசியில் அரசனும் இல்லை புருசனும் இல்லை என்ற நிலைதான் வரும்..

    இவ்வாறானவர்களுக்கு சமூகம் ஒருநாள் சிறந்த பாடம் கற்பிக்கும்..

    ReplyDelete

Powered by Blogger.