Header Ads



பயணிகளின் எடைக்கு ஏற்ப விமான கட்டணம்...?



விமானப்பயணிகளின் எடைக்கு ஏற்ப பயணக்கட்டணத்தை நிர்மாணித்தால் அது இரண்டு பக்கமும் நன்மையை அளிக்கும் என்று பாரத் பட்டா என்ற பொருளாதார வல்லுநர் கூறியுள்ளார். நார்வே நாட்டின் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் இவர், இந்த முறையைப் பயன்படுத்தினால், உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் காணப்படுகின்ற இந்த காலகட்டத்தில், விமானக் கம்பெனிகளுக்கும் இந்த முறை பயன்தரக் கூடியதாக இருக்கும். இதன்பொருட்டு பயணிகள் தங்கள் எடையைக் குறைக்கும் வாய்ப்பும் அமையலாம் என்கிறார்.

கட்டணத்தை நிர்ணயம் செய்ய இவர் மூன்று விதமான முறைகளைக் கூறுகின்றார். முதலாவதாக பயணிகளின் எடை உடைமைகளின் எடை இரண்டையும் கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் வசூலித்தல். இரண்டாவதாக ஒரே மாதிரியான கட்டணத்தொகையுடன் அதிக எடை உடைய பயணிகள் அதிகத் தொகை செலுத்துதல். மூன்றாவதாக ஒரே மாதிரியான கட்டணத்தொகையில் குறைந்த உடல் எடை கொண்டவருக்கு தள்ளுபடி செய்வதுடன், அதிக எடை கொண்டோரிடம் அதிகத் தொகை வசூலிக்கலாம்.

விமான நிறுவனங்களும் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விழைகின்றன. மேலும், 2010ஆம் ஆண்டின் கருத்துக் கணிப்பின்படி, 76 சதவிகிதத்திற்கும் மேலான பயணிகள், உடல் பருமன் காரணமாக இரண்டு இருக்கை கேட்கும் விமானப்பயணிகளிடம் அதிகக் கட்டணம் பெறலாம் என்ற கருத்தையே தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.