பீட்சாவுக்காக துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மாணவிகள்
ரஷ்யாவில், பீட்சாவுக்காக, கல்லூரி மாணவிகளை, துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தவர், கைது செய்யப்பட்டார்.ரஷ்யாவின், அஸ்ட்ராகான் நகரில் உள்ள கல்லூரியில், நேற்று முன்தினம், புகுந்த மர்மநபர், துப்பாக்கி முனையில், மாணவிகள், ஆசிரியர் உள்ளிட்ட, நான்கு பேரை, பிணைக் கைதிகளாக, ஒரு அறையில் அடைத்து வைத்தார். அந்த நபரிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பீட்சாவும், குளிர்பானமும் தந்தால், மாணவிகளையும், ஆசிரியரையும் விடுவிப்பதாக, மர்ம ஆசாமி கூறினார்.கோரிக்கையை ஏற்ற போலீசார், பீட்சாவும், குளிர்பானமும் வரவழைத்து கொடுத்தனர். இதையடுத்து, நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த அந்த ஆசாமியை, போலீசார் கைது செய்துள்ளனர்.
நல்ல போலீசும் நல்ல மர்ம நபரும்!
ReplyDelete