Header Ads



கண்டியிலுள்ள இந்திய தூதரகத்திற்கு படையெடுத்த பொதுபல சேனா (படங்கள்)



(J.M..Hafeez)

சென்னை நகரில் வைத்து தாக்கப்படடதாகச் சொல்லப்படும ஆறுமுகன் நட்ராஜன் முன்னிலையில் தெரிவித்தார் (20.3.2013) பொது பலசேனாவின் கண்டி மாவட்ட அமைப்பின் அங்கத்தவர்கள் சுமார் 300 பேர் இன்று கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதுவராலயத்திற்கு கண்டி மத்திய சந்தை முன்னிருந்து ஊர்வலமாகச் சென்று ஒருமகஜரையும் கையளித்து அங்கு உரையாற்றும போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையைச் சேர்ந்த பல பிக்குகள் தம்பதிவ யாத்திரையை நிறைவு செய்த பின்பு சாரம் சேர்ட் அணிந்தகொண்டு சென்னை மகாபோதி நிலையத்திற்கு வந்தனர். எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் எனது காவி உடையை கலைய மாட்டேன் என்ற திடசங்கற்பத்துடன் வந்தேன். இருப்பினும் தாக்கப்பட்டேன். காவி உடையில் ஏதேனும் மாற்றம் செய்துகொண்டு போகவும். இல்லாவிட்டால் மீண்டும் தாக்கப் படும் அபாயம் உள்ளதாகவும் புகையிரத நிலையத்தின் சில சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறினார்கள். 

பின்னர் நானும் அவ்வாறே குளிருக்கு அணியும் மேலங்கி(ஜேசி)p ஒன்றையும் தொப்பி ஒன்றையும் அணிந்து கொண்டுதான் வெளியேறினேன்.

அவர்கள் தாக்கயி விதம் எனக்கு காயம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ஒருவர் கெமராவுடன் வந்தார். அவர் அதனை சரிசெய்து 'ரெடி' என்றதுமே என்னை 'ஸ்ரீலங்கா...' என்று கூறிக்கொண்டு ஒருவன் தாக்கினான். இதன் மூலம் இரண்டு விடயங்கள் தெரிய வருகிறது. ஒன்று நாம் தாக்கப் படுவதாக உலகுக்கக் காட்டுவதற்காக. மற்றது இந்திய பலவந்தத்தின் ஊடகவே தீர்மானத்தை எடுத்தது எனக்காட்டி இரு சாராரையும் திருப்பிதிப் படுத்துவது மற்றொறு நோக்கமாகும். 

நான் ஒருவாறு புகையிரதப் பெட்டியிலிருந்து குதித்து அங்குமிங்கும் ஓடி அடியின் தாகத்தைக் குறைத்துக்கொண்டேன் என்றார். இந்திய உதவித்தூதுவரிடம் மனிப்புக் கோரும்படி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் மன்னிப்புக் கோரினார். எனவே பௌத்த தர்மத்தின் அடிப்படையில் அம்மன்னிப்பை நாம் ஏற்றுக் கொண்டோம் எனத் தெரிவித்தார்.




1 comment:

  1. ஊடக நிறுவனதுக்கு என் பணிவான வேண்டுகோள் செய்திகள் வெளியிடுகையில் பொது பலசேனா என்று சொல்வதனை விட ”அரைகுறை பிக்குகள்” என்று வெளியிடுங்கள்.
    முஸ்லீம்கனை தீவிர வாதிகளாக சித்தரிக்க மோசடி வார்த்தைகளை பிரயோகித்த சிங்கள ஊடகங்களுக்கு இது சிறந்த பதிலடி.

    ReplyDelete

Powered by Blogger.