Header Ads



மலாலா மீண்டும் பாடசாலை செல்கிறார்..!



பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது பெண்ணை, தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தலை, முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தன. 

பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிய மலாலாவுக்கு உயர்தர சிகிச்சையை இலவசமாக வழங்க இங்கிலாந்து அரசு முன்வந்தது. 

இதனையடுத்து, மலாலாவை அவரது பெற்றோர்கள் லண்டனில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பலமுறை ஆபரேஷன் செய்யப்பட்டது. அவர் லண்டனில் தங்கியிருப்பதற்கு வசதியாக மலாலாவின் தந்தைக்கு லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் பணி வழங்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில், ஆபரேஷன் முடிந்து சற்று உடல் நலம் தேறிய மலாலா, நேற்று பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து தனது படிப்பை மீண்டும் தொடங்கினார். 

இந்த அனுபவம் குறித்து கருத்து கூறிய அவர், 'மீண்டும் பள்ளிக்கு செல்லும் எனது கனவு இன்று நிறைவேறியுள்ளதால் நான் பேரானந்தம் அடைகிறேன். இந்த அடிப்படை வாய்ப்பை உலகில் உள்ள எல்லா பெண்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.