இலங்கை வீரர்கள் என்ன செய்யப்போகிறார்கள்..?
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறியது. ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்து தமிழகமெங்கும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம், நடக்கவிருக்கும் ஐ.பி.எல்.-6 கிரிக்கெட் போட்டிகளிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அனைத்து நாடுகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அணியில் கலந்திருப்பர். இப்போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகளில் இலங்கையின் சிறந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடினால் தேவையற்ற போராட்டங்களை சந்திக்க வேண்டியிக்கும்.
எனவே, ரசிகர்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் போட்டிகளிலாவது இலங்கை வீரர்கள் பங்கு கொள்ளவேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எண்ணுகிறது. ஆனால், மூன்று முறை பட்டம் வெற்ற சென்னை அணியினருக்கு, தங்களுடைய அணியில் உள்ள இலங்கை வீரர்கள் இல்லாமல் போட்டியை எதிர்கொள்வது என்பது கடினமாக இருக்கும். சென்னையில் மொத்தம் 10 போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Definately it is going to be a big riot it is nice advice to avoid on certain places. http://nusrathkamal.blogspot.com
ReplyDeleteIt is going to be a real problem for Cricket players.
ReplyDelete