'ஹலால்' பலி கொடுக்கப்பட்ட குழந்தை..!
(தம்பி)
01)
சலவைத் தொழிலாளி ஒருவனிடம் - ஒரு கழுதையும் நாயும் இருந்தன. சலவைக்காரனின் துணி மூட்டைகளைச் சுமப்பது கழுதையின் வேலை. வீட்டைக் காவல் செய்வது நாயின் வேலை. இவற்றின் பணிகள் செவ்வனே நடந்து வந்தன.
ஒரு நாள் நள்ளிரவு. சுலவைக்காரனின் வீட்டுக்குள் திருடன் ஒருவன் புகுந்தான். இந்தச் சமயம் பார்த்து – நாய் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆனால், திருடனைக் கழுதை கண்டு கொண்டது. உடனே, தனது எஜமானனை உசார்படுத்தி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் கழுதை - உச்சக் குரலில் கத்தத் தொடங்கியது.
கண்விழித்த சலவைக்காரன், கழுதைக்கு பசி வந்து விட்டதோ என எண்ணி ஆகாரம், தண்ணீர் வைத்து விட்டு மீண்டும் தூங்கத் தொடங்கினான். கழுதை கத்துவதை நிறுத்திய பாடில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சலவைக்காரன் - வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து, கழுதையை 'மொத்த' ஆரம்பித்தான்.
நாயின் வேலையைக் கழுதை பார்த்தால் - இப்படி அடிபட்டுத்தான் ஆகவேண்டும் என்பது இந்தக் கதையின் 'நீதி'யாகும்!
02)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பற்றி அறிவீர்கள். இலங்கை முஸ்லிம்களின் மத, கலாசார விவகாரங்களில் தலைமை வழங்குவது இந்த அமைப்பின் பணியாகும். இந்த அமைப்பு அரசியலோடு தொடர்புபட்டதல்ல. தொடர்புபடவும் கூடாது. இலங்கையில் அரசியல் விவகாரங்களைப் பார்த்துக் கொள்வதற்கு நிறையவே அரசியல் கட்சிகள் உள்ளன.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது - தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகக் கூறி கடந்த வருடம் ஜெனீவாவில் ஒரு பிரேரணையை அமெரிக்கா கொண்டு வந்தது. அந்த நடவடிக்கை அரசியலோடு தொடர்புபட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையானது இலங்கையையும், அதன் ஆட்சியாளர்களையும் இறுக்கிப் பிடிக்கும் என்கிற அச்சம் மேலோங்கியிருந்ததொரு நிலையில், தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் தம்முடன் இணைந்திருந்த அரசியல் கட்சிகளையெல்லாம் களத்தில் இறக்கி – தமக்குச் சாதகமாக செயற்பட வைத்தனர்.
இப்படியானதொரு நிலையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரும் மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி - இலங்கை ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இவர்களின் வக்காலத்து ஜெனீவா வரை நீண்டது. இலங்கைக்கு ஆதரவாக செயற்படுமாறு இஸ்லாமிய நாடுகளிடம் உலமா சபை கோரிக்கை விடுத்தது.
ஜம்இய்யத்துல் உலமா சபையின் மேற்படி நடவடிக்கை அநேகருக்கு வியப்பைத் தந்தது. முஸ்லிம்களின் மத, கலாசார விடயங்களில் தலைமை வழங்குவதற்கானதொரு அமைப்பு, அரசியல் களத்தில் குதித்தமை குறித்து – பலரும் அதிருப்தியுற்றனர். அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டிய வேலையில் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏன் தலையிட வேண்டும் என்று முஸ்லிம்களுக்குள்ளேயே முணுமுணுப்புகள் எழுந்தன.
இந்த நிலையில், 'நாட்டுப் பற்றினை வெளிக்காட்டும் வகையிலேயே' தாம் - ஜெனீவா விவகாரத்தில் மூக்கு நுழைத்ததாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அப்போது விளக்கம் கூறியது.
ஆனால், இலங்கையின் முக்கிய அமைச்சரான பற்றாலி சம்பிக்க ரணவக்க அண்மையில் வேறொரு கருத்தைக் கூறியுள்ளார். அதாவது, 'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் கேட்டுக் கொண்டமைக்காக ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு சாதமாக அரபு நாடுகள் நடந்து கொள்ளவில்லை. இலங்கைக்கு எதிரான பிரேரணையை இஸ்ரேல் ஆதரித்தது. இஸ்ரேல் என்றால் அரபு நாடுகளுக்குப் பிடிக்காது. அதனால், இஸ்ரேல் ஆதரிக்கும் பிரேரணையினை அரபு நாடுகள் எதிர்த்தன. அது - இலங்கைக்கு சாதகமாகப் போய் விட்டது. அவ்வளவுதான்' என்றார்.
அமைச்சர் சம்பிக்கவின் இந்தக் கூற்று - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரின் முகத்தில் ஓங்கிக் குத்துவதற்கு அல்லது கரியைப் பூசுவதற்கு ஒப்பானதாகும்.
ஆனால் பாருங்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முகத்தில் பூசப்பட்ட அந்தக் கரியைத் துடைப்பதற்குக் கூட – நமது நாட்டின் ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை.
03)
ஹலால் விவகாரம் தொடர்பில் 'தீர்வொன்று' எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் 'தீர்வு' விடயத்தில் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் 'முந்திரிக்கொட்டைத்' தனமாகச் செயற்பட்டு விட்டனர் என்று முஸ்லிம் தரப்பிலிருந்தே ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்மானம் குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அதிருப்தியினை ஊடகங்களில் கடுமையான தொனியில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹலால் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து - ஆராய்ந்து அறிக்கையொன்றினைச் சமர்ப்பிப்பதற்காக, அரசாங்கம் அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்துள்ளது. இந்தக் குழுவில் ரஊப் ஹக்கீம், அதாஉல்லா, றிசாட் பதியுத்தீன் மற்றும் பௌஸி ஆகிய முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த உப குழுவினர் ஹலால் விவகாரம் தொடர்பில் முடிவொன்றினை அறிவிக்கும் வரை, தாம் எந்தவித தீர்மானத்துக்கும் செல்லப் போவதில்லை என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கூறிவந்தது. கடந்த 06 ஆம் திகதி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் - உலமா சபையினருக்கும் இடையில் ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின்போதும் உலமாசபையினர் அவ்வாறே கூறியினார்கள் என்று மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறுகின்றார்.
இருந்தபோதும், அமைச்சரவை உபகுழுவின் முடிவு கிடைக்கும் வரை - காத்திருக்கப் போவதாகக் கூறிய உலமா சபையினர் - திடீரென்று, உப குழுவின் முடிவுக்கு முன்னதாகவே பௌத்த பிக்குகளுடன் இணைந்து 'ஹலால்' தொடர்பான தீர்மானமொன்றினை வெளியிட்டுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் இந்தத் தீர்மானம் பாரிய விமர்சனத்து உள்ளாகி வருகிறது.
ஹலால் விவகாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, உள்நாட்டில் விற்கப்படும் பொருட்களின் உறைகளில் இனி 'ஹலால்' எனும் முத்திரையை 'அச்சிடல் வேண்டும் என்கிற கட்டாயமில்லை' என்கிற முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது, நிறுவனங்கள் தமது பொருட்களை ஹலாலான முறையில் உற்பத்தி செய்யலாம். அவற்றுக்கான ஹலால் சான்றிதழ்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமிருந்து பெற்றும் கொள்ளலாம். ஆனாலும், ஹலால் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் தமது பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்வதாயின் - பொருளின் உறைகளில் 'ஹாலால்' என்கிற முத்திரையை அச்சிட வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. விரும்பினால் அச்சிடலாம், விருப்பமில்லையெனில் அச்சிடத் தேவையில்லை. ஆனால், வெளிநாடுகளுக்கு தமது பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ஹலால் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதோடு, தமது உற்பத்திப் பொருளின் உறையில் 'ஹலால்' என்கிற முத்திரையை அச்சிட வேண்டும். இதுதான் உலமா சபையினர் கூட்டாக அறிவித்த தீர்மானத்தின் விபரமாகும்.
இதனால், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் தமக்கான பொருட்களை நுகர்வதில் பாரிய சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் நிலை உருவாகியுள்ளது. இதுவரை காலமும் ஹலாலான பொருட்கள் எவை, ஹலாலற்ற பொருட்கள் எவை என்பதை முஸ்லிம்கள் 'ஹலால் முத்திரை'யைக் கொண்டு எளிதாக அடையாளம் கண்டு வந்தனர். இனி அப்படி முடியாது.
ஆனால், இதற்கு மாற்றீடு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு நிறுவனமும் தமது உற்பத்திப் பொருளிலுள்ள உள்ளீடுகள் எவை என்பதை பொருளின் உறையில் குறிப்பிடுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நுகர்வோர் - குறித்த பொருள் தமக்கு உகந்ததா? இல்லையா? என்பதை இனங்கண்டு கொள்வார்கள் என்று ஒரு சாரார் கூறிகின்றனர். ஆனால், பல நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களின் உள்ளீட்டுகள் தொடர்பான விபரங்களை அவற்றின் உறைகளில் குறியீட்டு முறையிலும் பதித்து வருகின்றன. இக் குறியீடுகளை அடையாளம் காண்பதென்பது சாதாரண நுகர்வோனுக்கு கடினமாகும்.
உதாரணமாக, E 100, E 110, E 120 போன்ற குறியீடுகள் பற்றி எத்தனை பேர் அறிவார்கள். இந்தக் குறியீடுகள் பொருளொன்றில் உறையில் காணப்படுமாயின், குறித்த பொருள் பன்றியின் உடற்பாகத்தினை உள்ளீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று அர்த்தப்படும். இதை எத்தனை நுகர்வாளர்களால் புரிந்து கொள்ள முடியும்?
முஸ்லிம்கள் பன்றியோடு தொடர்புபட்ட எவற்றினையும் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், சாதாரண முஸ்லிமொருவர் இந்தக் குறியீடுகள் பற்றி அறிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். அதாவது, ஹலால் குறியீட்டினை கட்டாயமாக அச்சிடும் முறைமையை விட்டுக் கொடுத்ததன் விளைவாக, சமய அடிப்படையில் தமக்குத் 'தடைசெய்யப்பட்ட பொருட்களை' முஸ்லிம்கள் நுகர்ந்து விடக்கூடிய நிலைவரமொன்று வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் பொருட்களுக்கு ஹலால் முத்திரையிடும் முறைமையினை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்கள் என்றும், ஹலால் முத்திரையிடும் முறைமையானது தங்கள் குழந்தை என்றும் உலமா சபை கூறுகிறது.
நமது குழந்தை என்பதற்காக அதை நாம் விரும்பியவாறு நரபலி கொடுக்கவோ அல்லது விலையொன்றைப் பேசி விற்று விடவோ முடியுமா என்ன? அவ்வாறான குற்றச் செயல் மன்னிப்பற்ற பெரும் பாவமாகும்.
04)
இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிய 'கண்டம்' ஒன்றிலிருந்து தப்பித்துள்ளார்கள். ஹலால் விடயத்தில் என்ன செய்வது என்று தலையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தவர்களை – உலமா சபையின் 'அவசரத் தீர்மானம்' காப்பாற்றியுள்ளது. உண்மையில், ஹலால் விவகாரம் எனும் பந்தை – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்கமாக உலமா சபையினர் தட்டிவிட்டு இருந்திருக்கலாம். ஏனெனில், பொது பலசேனா என்பதும் அந்த அமைப்பின் முஸ்லிம் விரோதக் கோசங்களும் அரசியல்வயப்பட்டவையாகும். அதனால், ஆளுந்தரப்புடன் இணைந்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இந்த விவகாரத்தினை ஒப்படைத்து விடுவதே பொருத்தமாகும்.
உண்மையில், ஹலால் விவகாரம் தமது தலைகளில் சுமத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தது. அப்படி ஒரு நிலை வந்தால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக நன்றாகவே அறிவார்கள். அப்படியானதொரு நிலையில்தான், உலமா சபை 'அவசரக்குடுக்கை'த் தனமாக ஹலால் விடயத்தில் முடிவொன்றினை எடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காப்பாற்றியது.
ஆயினும், இவற்றையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் - ஆளுந்தரப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படம் எடுத்தாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஹலால் விடயத்தில் உலமா சபை அவசரப்படாமல் இருந்திருந்தால் - தாங்கள் 'இரண்டில் ஒன்று' பார்த்திருப்போம் என்கிற தொனியில் பேசுகின்றனர். ஆனால், இது விடயத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒரு புல்லைக் கூட 'புடுங்க' முடியாது என்பதை பாமர வாக்காளர்கள் கூட அறிவார்கள். பொறியில் சிக்கிய எலிகளுக்கும் - ஆளுந்தரப்பில் இணைந்து கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் பெருத்த வித்தியாசங்கள் எவையும் இல்லை என்பதை குழந்தைகள் கூட அறிந்து வைத்துள்ளனர்.
ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஹலால் விடயத்தில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்களாயின் - 'இரண்டில் ஒன்றை' கண்டிருக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தகுதியும் - தைரியமும் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு உள்ளன என்கிற கேள்விக்கு விடை நம்மிடமில்லை.
05)
மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மகளின் திருமணம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. மகளாரின் திருமணம் - அதுவும் வீட்டில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் மு.கா. தலைவர் ஹக்கீம் தனது கோபதாபங்களைப் பாராது - அனைத்து அரசியல் பிரமுகர்களையும் அழைத்திருந்தார். இதில் எல்லோருக்கும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் - அமைச்சர் அதாஉல்லாவை ஹக்கீம் அழைத்தமைதான். திருமணத்துக்கு அதாஉல்லாவும் சென்றிருந்தார்.
அமைச்சர்களான ஹக்கீமும் அதாஉல்லாம் அரசியல் பகையாளிகள். தேர்தல் காலங்களில் அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த ஊருக்குச் சென்றிருந்த மு.கா. தலைவர் ஹக்கீமை அதாஉல்லா அணியினர் தாக்கிய சம்பவங்கள் ஏராளமாக நடந்தேறியிருக்கின்றன. ஹக்கீமுடைய சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த பல விடயங்களைக் கூறி அதாஉல்லாவின் அணியினர் ஒலி பெருக்கிகளின் வழியாக ஹக்கீமுக்கு வசை பாடிய கூத்துக்கள் அக்கரைப்பற்றில் நிறையவே இடம்பெற்றிருக்கின்றன.
மட்டுமன்றி, அமைச்சர் அதாஉல்லாவுக்காகவும் - மு.கா. தலைவர் ஹக்கீமுக்காகவும் அவர்களின் கட்சித் தொண்டர்கள் வெட்டிக் குத்திக் கொண்டு சண்டை பிடித்துள்ளார்கள். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டமை தொடர்பிலான பல வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் உள்ளன.
இருந்தாலும், இவற்றையெல்லாம் மறந்து விட்டு தனது மகளின் திருமணம் என்கிற ஒரு நல்ல காரியத்துக்கு ஹக்கீம் அழைக்க – அதாஉல்லாவும் சென்று வாழ்த்தி விட்டு வந்திருக்கின்றார்.
இது நல்லதொரு விடயம்தான். பகைமைகளைப் பாராட்டிக் கொண்டிராமல் அடுத்தவரின் நல்லது, கெட்டதுகளில் பங்கேற்பது பாராட்டுதற்குரிய செயல்தான்.
'ஆனாலும் ஒரு கேள்வி இருக்கிறது. தமது வீட்டுத் திருமணம் ஒன்றினை முன்னிறுத்தி – நமது அரசியல் தலைவர்களால் ஒன்றுபட முடியுமென்றால், முஸ்லிம் சமூகத்தின் சமயம் சார்ந்த உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காக இவர்களால் ஏன் ஒன்று சேர்ந்து செயற்பட முடியாது' என்று பலர் ஆதங்கபடுகின்றனர்.
நியாயமான கேள்விதான். ஆனால் - இது ஒன்றும் விடை தெரியாத கேள்வியல்ல!!
nice articale
ReplyDeleteஹலால் சம்பந்தமான பிரச்சினைக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எடுத்த முடிவு தவறு என்று தரப்பு அதற்கான சரியான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். எடுக்க பட்ட முடிவை குற்றம் கானுவதினால் மட்டும் குறை கூறுபவர்கள் சுற்றவாளிகலகிட முடியாது. பாராளுமன்றத்தில் பன்றி இறைச்சி கொண்டுவரப்பட்ட போதே எதுவும் செய்துவிட முடியாத நமது அரசியல் வாதிகளினால் ஹலால் சம்பந்தமான இந்த பிரச்சினையில் ஒன்றும் கிழிக்க போவது இல்லை. இது சம்பந்தமான முடிவை எடுக்க அல்லாஹ் மாத்திரமே போதுமானவன், நாம் அனைவரும் அவனிடமே கை ஏந்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்...
ReplyDeleteplease do not publish like this stupid articles
ReplyDeletei hate this Article
ReplyDeletewonderful article jazakallha kayraa
ReplyDeleteஅரசாங்கத்தால் ஹலால் விடயத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவை, அரசு தன் வாயிலாக (ஹலால் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால்) அறிவிப்புச் செய்வதன் மூலம் ஏற்படும் உள்நாட்டு,சர்வதேச பிராந்திய சிக்கல்களை தவிர்ந்து கொள்ளும் நோக்கில் அம்முடிவை முஸ்லிம்களின் வாயிலாகவே அறிவிப்புச் செய்ய வைப்பதன் மூலம் தந்திரமாக நாடகமாடி தவிர்ந்து கொண்டிருக்கின்றது.
ReplyDeleteஇங்கு ஏமாற்றப்பட்டது முஸ்லிம் சமூகமா ? அல்லது விவேகமற்ற எமது தலைகளா ?
சுமார் 2 மாதத்திற்குள் ஜ.இ.உலமாவினால் 3 நிலைப்பாடுகள்.
1.முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால்.
2. ஹலால் விடயத்தை அரசாங்கத்திடம் கையளிப்பது .
3. ஏற்றுமதிக்கு மட்டும்
.
இவ்வாறு ஒரு தெளிவற்ற அதில் உறுதியற்ற நிலைப்பாடுகளை (அவசர அவசரமாக ஜெனீவாவிட்கு முன்) ஒரு சமூகத்தின் பிரதி நிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எவ்வாறு எடுக்க முடியும் ???
ஏற்றுமதிப் பொருளுக்கான முத்திரையையும் நிராகரித்தால் அரசாங்கம் மிக விரைவில் தன் தவரை உணர்ந்து எமது காலடிக்கு பணிந்து வருவார்கள் என்ற உண்மையை பல மட்டங்கள் மூலம் உணர்த்தப்பட்டும் அதை கறுத்திட் கொள்ளாதது ஏன் ???
ஏற்றுமதிக்கு மட்டும் ஹலால் என்பது இனவாத அரசையும் காவிப்ப யங்கரவாதத்தையும் பெரும்பான்மை வர்த்தக சமூகத்தையும் திருப்திப்படுத்தவா ???
5% உம் இல்லாத காவிப்பயங்கர வாதத்தை தடுக்க முடியாது 10% மானோரின் உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?? ஜெனீவா வரை சென்று அரசுக்கு முட்டுக்கொடுக்க முடியும் என்றால் ஏன் இது பற்றி அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது ???
ஹலால் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க அரசினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்க முன் முந்திக்கொண்டு அம்முடிவை ஜ.இ.உ ஏன் அறிவித்தது ???
கல்வியும் தகுதியும் முதிர்ச்சியும் விவேகமும் இல்லாத எமது சில தலைமைகளின் பின்னால் தொடர்ந்து கண்மூடித்தனமாக நாம் பயணிப்போம் எனில் இது போன்று நிறையவே நிகழ்வுகள் காத்திருக்கின்றன.
இந்நிலையில் தொடர்ந்தும் ஜம்இய்யதுல் உலமாவை நமது ஏக சமாதான பேரம் பேசும் பிடதிநிதியாக இதில் தலையிட வைத்து அவர்களையும் எம்மையும் பிரச்சினைக்குள் மாட்டிவிடாமல் மாற்று வழிகளை இனங்கான வேண்டும்.
உம்மு சலமா (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘(ஒரு முறை) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்;. தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்து கொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்கு குற்றத்தில் பங்கு உண்டு)’ என்று கூறினார்கள். மக்கள், ‘அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?’ என்று கேட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இல்லை அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)’ என்று கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்-3775;).
“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ், அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை!” (அல்-குர் ஆன் 13: 11)
Dear brothers.
ReplyDeleteWe should not deliver a speech that would hurt or make divisions among the community. ACJU had to take a decision with out waiting the decision of the committee appointed by the cabinet.We have to consider The decision taken by ACJU is not their sole opinion.The have discussed with the prominent people of our community.The decision needed urgenty, Because
1.Day to day the issues created by BBS much more which concentrate on islam and muslims. The public expecting a logical and reasonable answer. for which you cant distract them from producing a urgent decision
2. Our political leaders dont have the islamic knowledge on this issue.They cant come to a conclusion even if they have appointed by cabinet.
Its the time for us to unite as one ummah, not to engage in activities like writing or speaking against the decision of ACJU which would not bring the help from allah. Allah is with those who are with patience,united,reform oneself and seeking help from allah. Brothers refer this speech.
http://www.youtube.com/watch?v=fDhTBopj8oA
please remove this article
ReplyDeleteithink this guy who has writen this article must learn islam first..
ReplyDeleteplease remove this kind of article..because of this kind of article jaffnamuslim may lose many fans.
ReplyDelete