Header Ads



மௌலவியின் தொப்பி கீழேபோட்டு மிதிக்கப்படுவதை எதிர்த்த சிங்கள சகோதரர்கள்



(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மவ்லவி ஒருவர் தலையில் அனிந்திருந்த தொப்பியை பூஜாப்பிட்டிய நகரில் வைத்து பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கழற்றி  கீழே போட்டு மிதித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாகவும் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாரான நிகழ்வு ஒன்று இடம் பெற்றது வேதனைக்குறிய விடயம் என்றும்  பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் தெரிவித்தார்.

இன்று இடம் பெற்ற பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஏ.எல்.எம். ரஸான்,

கண்டி-  கல்ஹன்னை பஸ் வண்டி ஒன்றில் கல்ஹின்னை பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மவ்லவி ஒருவர் பயனித்துள்ளார். பஸ் வண்டி பூஜாப்பிட்டிய நகரின் ஊடாக செல்லும் போது அங்கிருந்த ஒரு இளைஞர் (இவர் முச்சக்கர வண்டி சாரதி என கூறப்படுகிறது) ஜன்னல் வலியாக கையை இட்டு மவ்லவி அனிந்திருந்த தொப்பியை  கழற்றி   எடுத்துள்ளார். பின் அதனை கீழே போட்டு மிதித்துள்ளார். அங்கிருந்த மற்றைய  சிங்கள சகோதரர்கள் இச் செயலை எதிர்த்துள்ளனர்.

இவ்வாரான சம்பவங்கள் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழும் இப்பிரதேசத்திற்கு உகந்ததல்ல. முஸ்லிமகளது மனதை புன்படுத்துகின்றது. எனவே இவ்வாரான சமபவங்கள் இதன் பின் நடைபெறாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டார்.


No comments

Powered by Blogger.