பாம்போடு சகஜமாக பழகும் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் வழங்கும் 'சமாதானம் என்றால் என்ன' 'ஒற்றுமை என்றால் என்ன' என்பதை செயன்முறையில் நிகழ்த்திக் காட்டும் மாபெரும் அதிசயக் காட்சி இன்று 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் முதல் நிகழ்வு பெண்களுக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
பொல்கஹவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின் (வயது 16) முன்னந்தண்டு சத்திரசிகிச்சைக்காக நடாத்தப்படும் இம்மாபெரும் நிகழ்வுகளில் 'விஷப் பாம்புகளுடன் விபரீதமாக விளையாடும் காட்சி' '10அடி நீளம் கொண்ட 20அடி எடை கொண்ட மலைப்பாம்பை கழுத்தில் சுத்தியவாரு நடனமாடுதல்' 'தீப்பந்தங்களினால் உடம்பை சுட்டெறித்துக் கொண்டு நடனமாடும் நிகழ்வு' '4அடி டியூப் லைட்டை கரும்பு போல் கடித்து விழுங்கும் காட்சி' உள்ளிட்ட மாயாஜால நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Post a Comment