Header Ads



பாலஸ்தீனியர்களின் கண்கள் வழியாக உலகத்தைப் பாருங்கள் - ஒபாமா



பிரச்சினைக்குள்ளான பகுதிகளை பெறுவதில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரிவினை நிலவி வருகிறது. 1976-ம் ஆண்டு போரில் இஸ்ரேல் கைப்பற்றிய பகுதிகளை பாலஸ்தீனம் மீண்டும் பெற விரும்புகிறது.
 
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் பகுதிகளில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஜெருசலேம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
 
அப்போது அவர் இரு நாடுகளிலும் அமைதியின் அவசியத்தை வலியுறுத்தினர். கூட்டதில் அவர் கூறியதாவது:-
 
அமைதி மிகவும் அவசியமானது. அமைதி சாத்தியமே. இதை நான் வாய்மொழியாக கூறவில்லை. அதற்கு உறுதி அளிக்கிறேன்.
 
அமைதியே பாதுகாப்புக்கான ஒரே வழி. அமைதி நிலவினால் மட்டுமே அடுத்த தலைமுறையான நீங்கள் யூத கலாசாரத்தை காக்கும் சியோனிசத்தை பாதுகாக்க முடியும். பாலஸ்தீனியர்களின் கண்கள் வழியாக உலகத்தைப் பாருங்கள்.
 
இரு நாடுகளாக செயல்பட முடியும் என்பதில் இரு நாட்டு மக்களும், இளைஞர்களும் நம்பிக்கை இழந்தால், அது மிகவும் ஆபத்தானதாகும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேச்சுக்களை பாலஸ்தீன அதிபர் முகமத் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.

1 comment:

  1. engalin janazakal meethu ne eari nindru sonnalum engalin palastine i vitu koduka mudiyathu.obama ne oru jewsdog.

    ReplyDelete

Powered by Blogger.