காத்தான்குடியில் மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 29.03.2013 பிற்பகல் 04.00 மணியளவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவின் சிரேஸ்ட உறுப்பினரும் மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஸ் ஸெய்க் ஸைனுல் ஆப்தீன்(மதனி) தெரிவித்தார்.
இம்மாபெரும் இஸ்லாமிய பெண்கள் கருத்தரங்கில் 'மேற்கத்தியத்திற்கும் இஸ்லாத்திற்கும் மத்தியில் பெண் உரிமை'' எனும் தலைப்பில் மௌலவி ஏ.ஜீ.எம்.ஜலீல்(மதனி) உரை நிகழ்த்தவுள்ளதுடன் 'நவீன உலகில் முன்மாதிரி முஸ்லிம் பெண்'' எனும் தலைப்பில் மௌலவி றிஸ்வான்(மதனி)காணொளி விவரணமும், 'மறைந்திருந்து எமது உம்மத்தை கருவருக்கும் தொற்றா நோய்கள்'' எனும் தலைப்பில் காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன் விழிப்பூட்டல் நிகழ்வொன்றையும் செய்யவுள்ளனர்.
Post a Comment