சம்மாந்துறை உயர் தொழில்நுட்ப கல்வி நிலையத்திற்கு நிரந்தர கட்டடம்
(அகமட் எஸ். முகைடீன்)
சம்மாந்துறை உயர் தொழில்நுட்ப கல்வி நிலையத்திற்கான நிரந்தர கட்டடம் ஒன்றை நிர்மாணித்துத் தருவதாக இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பொதுப் பணிப்பாளர் டப்ல்யூ. ஹிலரி ஈ. சில்வா தெரிவித்தார்.
வளப் பற்றாக்குறையினால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நேற்று (23.03.2013) காலை பொதுப் பணிப்பாளர் குறித்த நிலையத்தின் பகுதி நேர கற்பித்தல் செயற்பாடு நடைபெறும் சம்மாந்துறை மத்திய கல்லூரிக்கு வருகை தந்து ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியினை பயிலும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு தெரிவித்ததாவது. சம்மாந்துறை நிலையமானது நல்ல பெறுபேறுகளை பெற்றுவருகின்றது. குறிப்பாக ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியின் பெறுபேறுகள் சிறப்பாக உள்ளது. இதனால் இந்நிலையத்தின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என விரும்பினேன். அந்தவகையில் இந்நிலையத்திற்கான நிரந்தர கட்டடத்தை அமைத்துத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்கின்றேன். கொளரவ நீதி அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்கள் இதற்கான காணியினை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். எனவே இக்காணி கிடைக்கப் பெற்றதும் கட்டடத்தை அமைத்துத்தர முடியும் என அவர் தெரிவித்தார்.
குறித்த கல்வி நிலையத்திற்கான நிரந்தர கட்டடமின்மையினால் பகுதி நேர கற்பித்தல் செயற்பாடுகள் சம்மாந்துறை மத்திய கல்லூரியில் நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக சம்மாந்துறை நிலையத்தின் கல்விசார் இணைப்பாளர் ஏ.எல்.அப்துல் றகுமான் அவர்களினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பணிப்பாளர் டப்ல்யூ. ஹிலரி ஈ. சில்வாவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
சம்மாந்துறை உயர் தொழில்நுட்ப கல்வி நிலைய வரலாற்றில் இந்நிறுவனத்தின் பொதுப் பணிப்பாளர் வருகை தந்தது இதுவே முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
90 ஆண்டுக்கு முட்பட்ட காலத்தில் வடக்கில் யாழ் தொழில்நுட்பக் கல்லூரி ,கிழக்கில் சம்மாந்துறை மட்டும் தான். இன்று எத்தனை முளைத்து விட்டது .இதக்கு என்ன காரணம் அதன் தரம் உயர்ந்துவிட்டால் தான் அதிபராக இருக்க முடியாது என்ற ஒரே காரணத்தினால் அந்த (தம்பி) துரோகம் தான் காரணம் மற்றும் ஊர் வாதமும் தான் காரணம்.ஆகவே பல்கலைகலகதுக்கும் இதே நிலை நடைபெறாமல் பார்த்துக்கொண்டால் அதுவே நம் சமூகத்துக்கு ஆற்றும் மிகவும் பெரிய உதவியாக இருக்கும்.
ReplyDelete