'எந்தவேளையில் என்ன நடக்குமோ என்ற அச்சநிலை முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது'
அலரிமாளிகையின் மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கையிழக்கும் நிலையை அரசு ஏற்படுத்தி விடக்கூடாது. இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் பிரதித் தலைவர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்கத் தீவிரமாக செயற்படும் பொதுபல சேனாவை அரசு உடன் தடைசெய்ய வேண்டும். பள்ளிவாசல்கள் உடைப்பு; பர்தா அணிவதற்குத் தடை விதிப்பு; ஹலாலை நிறுத்துதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளைப் பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
அதனால் முஸ்லிம் சமூகம் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டது. ஆனால் இந்தத் தீவிர நடவடிக்கையில் பெரும்பாலான சிங்கள மக்கள் பங்கு பற்றாததாலும், அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாலும் முஸ்லிம்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கி வருகின்றனர்.
குருநாகல், பதுளை, மஹியங்கனை மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் குடும்பங்களின் இருப்புக்கும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் இருப்புக்கும் இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எந்தவேளையில் என்ன நடக்குமோ என்ற அச்சநிலை இன்று அப்பகுதி முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சநிலையை முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டியது பொறுப்புமிக்க அரசின் கடமையாகும். இந்த அரசை நம்பியே இன்று முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
பெரும்பாலான முஸ்லிம்கள் அரசுக்கே இன்றும் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி அலரி மாளிகையில் வைத்துக் கூறியுள்ளார்.
ஆனால் அந்த அலரி மாளிகை மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கையிழக்காமல் இருக்க அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். என்றார். பெரும்பாலான முஸ்லிம்கள் அரசுக்கே இன்று ஆதரவு தெரிவிக்கின்றனர். அதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
Inthe arasai nambithan muslim kal irukkinralhalam... asthahfirullah... allah vai nambungal.. avane inthe ulahathin athifathi..
ReplyDeleteஅனைத்து முஸ்லீம்களும் முலு உலகையூம் படைத்த எஜமான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் நாம் ஒவ்வொரு தொழுகைக்குப்பிறகும் துஆ கேட்பதுதான் முஸ்லீம்களாகிய எமது ஆயிதம் நாம் பொருமையைக் கையாலும் போதெல்லாம் அல்லாஹ்வூடைய உதவி எமக்கு நிச்சயம் ( நிச்சயமாக அல்லாஹ் பொருமையாலர்களுடன் இருக்கிறான் ) என்ற அவனது புனித வார்தை உண்மை யென நம்பும் ஒவ்வொரு முஃமினும் ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகும் அவணிடம் கையேந்த வேண்டும்

ReplyDelete