அவசர விபத்து பிரிவு அமைக்க காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் நிதிசேகரிப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த வைத்திய சேவையை வழங்கிவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தமிழ்-முஸ்லிம் பொது மக்களின் பங்களிப்புடன் அவசர விபத்து பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு உறவுப்பலாமாகத் திகழும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அவசர விபத்து பிரிவு அமைக்க ஐப்பது 50 இலட்சம் ரூபா நிதி சேகரித்து வழங்க முயற்சி செய்து வருகின்றது அதன் ஓர் அங்கமாக அவசர விபத்து பிரிவு அமைப்பது தொடர்பில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு நேற்று திங்கட்கிழமை இரவு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் மகாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் மர்சூக் அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அஹமட் லெவ்வை,அதன் உறுப்பினர் சபீல் நளீமி ஆகியோரினால் அவசர விபத்து பிரிவு அமைப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத்,அதன் செயலாளர் ஸாதிகின் ஹாஜியார்,அதன் மூத்த உறுப்பினர் அஸாபிய பஸீர் ஹாஜியார் ,ஊடகவியலாளர்களான ஜெலீஸ்,சஜீ,பர்ஹான், மற்றும் உங்கள் காத்தான்குடி இணையத்தளத்தின் செய்தியாளர் டின் பைரூஸ்,ஸாஜில் நியூஸ் இணையத்தளத்தின் செய்தியாளர் நியாஸ் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இவ் அவசர விபத்து பிரிவு அமைக்க மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகின்ற நிலையில் 18 கோடி ரூபா வெளிநாட்டிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதியாக 2 இரண்டு கோடி ரூபா பணம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள் தமிழ்-முஸ்லிம் மக்களிடம் இருந்து ஏதிர்பார்க்கப்டுகின்றது இதில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களிடம் இருந்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால்; 50 ஐப்பது இலட்சம் ரூபா நிதி சேகரித்து வழங்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அவசர விபத்து பிரிவு அமைக்க நிதி சேகரிப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு ஊடக அறிக்கையொன்றும் இதன் போது கையளிக்கப்பட்டது.
Post a Comment