அரசாங்கத்திற்கு முஸ்லிம் இடதுசாரி முன்னணி எச்சரிக்கை...!
'மத்திய கொழும்பில் வாழும் மக்களை அரசாங்கம் வாக்களிக்கும் இயந்திரமாகவோ, அல்லது பணத்திற்காக விலைபோகும் விலை பொருட்களாகவோ கருத கூடாது. அவர்களுக்குள்ள உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கி நிரந்தரமான ஒரு வீடமைப்புத் திட்டத்தை அவர்கள் வாழும் பிரதேசத்திலேயே அமைத்து கொடுக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கம் பாரிய மக்கள் போராட்டத்தை சந்திக்க வெண்டிய நிலை ஏற்படும் இவ்வாறு முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் மொஹமட் பைசால் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தை அப்பல்வத்தை பகுதியில் வாழும் மக்கள் அவரை சந்தித்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடமாக நிலைமையை எடுத்து கூறி முறையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தொடர்ந்து கூறியதாவது,
கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் வாழும் குறைந்த வருமானமுடைய மக்கள் வசிக்கும் அப்பல்வத்தை சேரிபுறத்தை அரசாங்கம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதற்காக அந்த மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தவொரு எதிர்கால திட்டமுமின்றி தான் தோன்றித்தனமான அவர்களை வெளியேற்ற நினைப்பதை இந்நாட்டில் வாழும் ஜனநாயகத்தை மதிக்கும் எந்தவொரு பிரஜையும் ஏற்றுக்கொள்ள மாற்றார்கள்.
இது போன்ற ஒரு நிலைமை கடந்த காலத்தில் கொம்பனி தெருவில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்டது. அதற்கு எத்னையோ எதிர்ப்புகள் தோன்றிபோதும், போராட்டங்கள் நடத்திய போதும் இன்று வரை அங்கும் இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது.
இந்த அரசாங்கம் நாளாந்தம் சிறுபான்மை மக்களை பழி வாங்குவதிலேயே முனைப்பாக இருக்கிறது என்பதற்கு பல சம்பவங்கள் முன் மாதிரியாக இருக்கிறது. கொழும்பில் சேரிபுறத்தில் சிறுபான்மையினர் செறிந்து வாழ்வதால் அவர்களை சிறுசிறு பகுதிகளாக பிரித்து வேறு பிரதேசங்கிள்ல் குடியேற்றி அவர்களின் வாக்கு பலத்தை சிதறடிக்கச் செய்வதற்கான முதல் முயற்சியே இவ்வாறான வீடுடைப்பு சம்பவங்கள். எவ்வாறாயினும் இந்த மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை இந்த அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இல்லையேல் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதை திட்டவட்மாக கூறிக்கொள்கிறேன்
மொஹமட் பைசால்
பொதுச்செயலாளர்
Post a Comment