Header Ads



இறக்குமதியாகும் பால்மாவில் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயனம்



(தினகரன்) இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய DICYANDIAMIDE என்ற இரசாயன பதார்த்தம் கலந்துள்ளதா என்பதை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த தகவல்களையடுத்தே இவ்வாறு பால்மா தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ரூமி மர்ஸ¥க் தெரிவித்தார்.

குறித்த இரசாயன பதார்த்தம் இறக்குமதியாகும் பால்மாவில் இருக்கிறதா என்பதை கண்டறியும் வசதி இலங்கையில் இல்லாததால் வெளிநாடொன்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. கண்டிப்பாக நாம் தற்காலங்களில் உண்ணும் உண்வுகளில் அதிகளவான இரசாயணப்பதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளனவென்பது முற்றிலும் உண்மை. இருப்பினும் சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீண்ட நாள் பாவிக்கக்கூடிய உண்வுப்பதார்த்தங்களில் வேறுவிதமான மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்கள் கலக்கப்பட்ட உணவுகளை இறக்குமதிசெய்வதில் சில நாடுகள் செயற்படுவது நிருபிக்கப்பட்ட உண்மைதான். முற்காலங்களில் நமது மூதாதையர்கள் பல்லாண்டு காலம் ஆரோக்யமாக வாழ்ந்தார்கள் காரணம் பல இருப்பினும் அதில் உணவுப்பழக்கமும் முக்கிய பங்கை வைகித்தது அதுபோல் நாமும் நாம் உடல் நலம்பேணுவது மிக அத்திய அவசியமானதாய் உள்ளது அதன்பிரகாரம் நாம் உண்ணும் உணவுகளைத்தெரிவுசெய்வதில் நமது முளுக்கவனமும் செலுத்தப்படவேண்டும், பழங்கள், மரக்கறிவகையிலும் தற்காலத்தில் இரசாயணம் சர்வசாதாரணமாகப்பாவிக்குமளவிற்கு வந்துவிட்டது ஆகவே மரக்கறி, பழங்களை உண்ணும் முன்போ சமைக்கும் முன்போ நன்றாககக்ழுவிப்பாவித்தல் அவசியம். அத்துடன் கூடியளவு அடைக்கப்பட்டு நீண்டகாலங்களுக்கு பாவிக்க தயார் செய்யப்பட்ட உணவுகளை உண்ணாமல் தவிர்பது நல்லது, அத்துடன் சந்தேகத்துக்குரிய நாடுகளில் இருந்து வரும் உணவுப்பதார்த்தங்களையும் தவிர்பது நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.