முபாறக் மௌலவிக்கு றம்ழான் எழுதும் திறந்த மடல்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
அன்பின் கன்னியத்திற்குறிய முபாறக் மௌலவி அவர்களுக்கு ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் எழுதும் திறந்த மடல்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்களது அறிக்கைகளை பார்த்து அலுத்து வெறுத்து வெட்கித்தலைகுனிந்து போனதன் காரணத்தினால் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுத முற்பட்டேன் எனது அரசியல் பயணத்தில் உலமாக்களின் பங்கினையும் வழிகாட்டளையும் மிகவும் உயர்வாகப் பேணி செயற்பட்டவன் அத்தோடு உலமாக்களை என்றும் விமர்சிக்க விரும்பாதவன் ஆனால் என்றும் இல்லாதவாறு ஒரு உலமாவுக்கு எதிராக என்னை எழுதுகோல் எடுக்க வைத்தமைக்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன் (அல்லாஹ் போதுமானவன்)
இந்த நாட்டில் ஆன்மீக கடமை செய்ய வேண்டிய தார்மீக பொறுப்புள்ள கன்னியத்திற்குறிய ஒரு உலமா நீங்கள் ஆனால் அண்மைக்காலமாக உலமா கட்சி என்ற பெயரில் தன்னைத்தானே தலைவர் என சுயபட்டாபிசேகம் செய்து கொண்டு தினமும் அறிக்கை விட்டு தானும் அரசியலில் இருப்பதாக ஊமைபட்டாசு கொழுத்திக் காட்டும் ஒரு கடிதத்தலைப்பு (லெட்டஹெட்) கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த நீங்கள் இந்த புதிருக்குள் அப்பன் இல்லை என்ற கதையாக கட்சியின் பெயரை மாற்றம் செய்துள்ளீர்கள்.
இந்த பழமொழியை தங்களுக்கு கூறுவதில் கவளைப்படுகின்றேன் தற்போது பழைய போத்தலில் புதிய வைனாக கட்சியின் பெயரை முஸ்லிம் மக்கள் கட்சியென பெயர்மாற்றம் செய்து மீண்டும் தன்னை தானே தலைவர் என்று கூறிக் கொண்டு நாளொரு அறிக்கையும் தினம் ஒரு பத்திரிகை செய்தியுமாக இருக்கும் நீங்கள் தங்களது கட்சியை என்றாவது ஒரு நாள் மக்கள் என்னும் தராசில் நிறுத்தி நிறுத்துப் பார்த்தது உண்டா? அதன் மூலம் மக்கள் உங்களை தராசில் நிறுக்கின்றார்களா? அல்லது வெறுக்கின்றார்களா? என்பதை அறிய முடிந்ததா? மக்கள் தேவை சம்மந்தமாக அறிக்கை விடுவதற்கு அங்கிகாரத்தினை மக்கள் வழங்கியுள்ளார்களா? இல்லா விட்டால் இனிமேலாகினும் மக்கள் முன்நிலையில் தங்களையும் கட்சியையும் ஒரு முறை நிறுத்தி நிறுத்துப் பார்ப்பது பொறுத்தமாக இருக்கும் என வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன் தங்களுக்கு கௌரவமான ஆலோசனை தெரிவிக்க விரும்புகின்றேன்.
தாங்கள் கட்சித்தலைவராக இருந்து இதுவரையும் விட்ட அறிக்கைகள் அல்லது பத்திரகைச் செய்திகள் விடயமாக மக்கள் ஏதாவது நண்மையடைந்துள்ளார்களா? என்று தேசிய ரீதியில் தேடிப்பார்த்தேன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை உள்ளுரிலாவது இருக்கின்றதா என உங்கள் ஊரிலும் அலசிப்பார்தேன் ஆனால் அலுத்துப்போனேன்
இன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அடிதடி என்றும் வெட்டுக்குத்து என்றும் காட்டிக் கொடுப்பு என்றும் பஜரோக்களுக்கு சோரம் போகுதல் என்றும் திசைமாறிச் செல்லும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு பலராலும் எள்ளிநகையாடப்பட்டு வருகின்ற கால கட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகளை நீங்கள் ஒரு உலமாவாக இருந்து இஸ்லாம் கூறிய ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடிக்க வைப்பதற்கு என்றாவது ஒரு நாள் முனைப்புக் காட்டியதுண்டா? அல்லது அதற்கு மாறாக இஸ்லாம் வரையறுத்த அரசியலை சமூகமயப்படுத்த முற்பட்டதுண்டா?
தற்போதைய ஜனாதிபதியை வெற்றிபெறவைத்து ஆட்சிக் கதிரையில் அமர்தியவன் நான் என்று ஒரு காலத்தில் மார்பு தட்டிய நீங்கள் அது உண்மையாக இருந்தால் இன்னேரம் மந்திரிக் கதிரையில் இல்லாவிட்டாலும் மற்றவர் கண்டு எழுந்திருக்கும் கதிரையிலாவது அமர்ந்திருக்க வேண்டும்.
எனது தகுதிக்கு மானசீகமாக கிடைத்தது மாநகர சபை கதிரை ஆனால் ஒரு கட்சியின் தலைவராகிய உங்களால் ஒரு பிரதேச சபை உறுப்பினராக கூட வரமுடியவில்லை என்பதையிட்டு கவலையடைகின்றேன். ஆனால் எனக்கு கிடைத்த உறுப்பினர் பதவியைக் கொண்டு சமூகத்திற்கு சால்வைதான் போடமுடியாவிட்டாலும் கோவனத்தையாவது பாதுகாக்கின்ற முயற்றியில் இருக்கின்றேன் இன்ஸா அல்லாஹ் இருப்பேன் இந்தவகையில் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னந்தனியாக மாநகர சபையில் எனது எதிர்ப்பை காட்டினேன்.
ஆனால் உங்கள் கட்சியால் இந்த ஹலால், மற்றும் பொதுபல சேனாவின் மத அடக்கு முறைக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எடுத்த நடவடிக்கை தான் என்ன? அல்லது உங்களால் என்னைவிட சிறியதாய் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையிலேனும் ஈடுபட முடிந்ததா? அவ்வாறு செய்ய முதுகெலும்பு இல்லாத நீங்கள் அதனை விமர்சித்து அறிக்கை விடுவதற்கு தகுதியானவரா? அல்லது ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கு அநாகரிகமான முறையில் உலமா என்ற வரையரையை மீறி நாய்ப்பட்டியனிவிக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது ஒரு கற்றரிந்த ஒரு உலமாவுக்குறிய பண்பாக இருக்க முடியுமா? என்பதை ஒரு முறை மனச்சாட்சியுடன் சிந்தித்துப் பார்க்க தவறி விட்டீர்கள்.
உங்கள் கட்சியில் தலைவர் மட்டுமே அறிக்கை விடுவதை அவதானிக்க முடிகின்றது ஓரு போதும் செயலாளர், தவிசாளர், பொருளார், உயர்பீட உறுப்பினர்கள் என்று எவரும் அறிக்கை விட்டதாகவோ அறிமுகப்படுத்தப்பட்டதாகவோ இல்லை.
அது மாத்திரமன்றி இன்று வரைக்கும் உங்கள் கட்சியினால் ஒரு பேராளர் மாகநாடு நடாத்தப்பட்டதாக ஒரு அறிக்கையோ பத்திரிகைச் செய்தியோ அல்லது விளம்பரமோ வெளிவந்ததாக அறிய முடியவில்லை அப்படியென்றால் உங்கள் கட்சிக்கு தலைவர் மட்டும் தானா? பேராளர் மகாநாடுகள் நடத்தப்படுவதில்லையா? இறுதியாக உங்கள் கட்சி போட்டியிட்ட தேர்தல் எது? அத்தேர்தலில் கட்சி எடுத்த வாக்குகள் எத்தனை? அவ்வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எத்தனை பேர்? அத்துடன் உங்கள் கட்சியின் காரியாலயம் அமைந்துள்ள கந்தோர் விலாசத்தையாவது தந்தீர்களானால் என்றோ ஒரு நாள் காரியாலயத்திற்கு வந்து கைலாகு ஆவது தரலானம் என ஆசைப்படுகின்றேன்
இக்கடிதம் எழுதும் போது ஒரு பழைய பாடலின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றது மழை பெய்வது பொது நலம் அதற்காக குடை பிடிப்பது சுயநலம் இவ்வரிகளுக்கான அர்த்தம் என்ன என்பதை சிந்தித்து பார்க்கின்றேன் இன்னும் பதில் தெரியவில்லை
இப்படிக்கு
என்றும் தோழமையுடன்
றம்ழான்
மாநகர சபை உறுப்பினர்
மட்டக்களப்பு
உங்களின், இந்த திறந்த மடலின் மூலம் சமுதாயத்திற்கு என்ன செய்தியைக்கூற விரும்பினீர்கள்?முபாறக் மௌலவியின் மௌலிதுனை ஓதியுள்ளீர்கள்.அவரின் அறிக்கையினூடாக கோபமடைந்த நீங்கள் ,அவர் மீதான ஆக்ரோஷத்தை அவிழ்த்துள்ளீர்கள். அரசியல் சுக போகங்களுக்காக மற்றவனுக்கு வேட்டு வைக்கும், பதவிகளுக்காக முச்லிம் சமூகத்தை விற்றுப்பிழைக்கும் உங்கள் கட்சியிடமும் பரிவாரங்களிடமும் கேட்க வேண்டிய கேள்விகளை,காட்ட வேண்டிய ஆக்ரோஷத்தை. எதுவுமே இல்லாத ஒரு கட்சித்தலைவரிடம் சமூகத்திற்கு என்ன செய்தாய் ,உன் அரசியல் சக்தி என்ன என்று கேட்டு சூளுரைத்துள்ளீர்கள்.இயலாத ஒருவனிடம் சண்டித்தனம் காட்டுவதும்,சண்டியனிடம் மண்டியிடுவதும்தான் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் இரகசியமோ?
ReplyDeleteசகோதரர் றமழான் அவர்களுக்கு... மிகவும் பிரயோசனமான விமர்சனம் அழகிய முறையில் விமர்சித்துள்ளீர்கள் அல்லாஹ் உங்களுக்கு அதற்கான கூலியை தருவான்
ReplyDeletejazakallha Mr FALLULLHA,we need refuse like this Groups who are not makes unity among the Muslim.
ReplyDeleteதிரு ரமழான் அவர்களே!
ReplyDelete*உங்கள் தகுதியை நீங்களே பறைசாற்றி இருக்குறீர்கள். “தன்னைத் தான் போற்றுகிறவன், பொய்களைப் போர்த்துகிறான்” என்று எங்கேயோ வாசித்தேன்.
*ஒரு பாடலும் நினைவுக்கு வருகிறது, “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள்! உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள்!”
“மீச பத்தெக்க சுருட்டு கொளுத்தின கதை” முஸ்லிம்களின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான காலத்தில், உங்களுக்கு முபாறக் மௌலவி ஒரு பிரச்சினையாக தெரிந்திருக்கிறது!
*உங்கள் திறந்த மடலில் எதோ அரசியல் லாபம் மூடிக்கிடக்கிறது போல் தெரிகிறது!
*அரசியல் என்றால் உங்கள் (அரசியல்வாதிகள்) புலன்களும், நலன்களும் நன்றாகவே வேலை செய்கிறது!
*எங்களுக்கு நீங்களும் தேவை! முபாரக் மௌலவியும் தேவை! ஆசாத் சாலியும் தேவை! ஹசனலியும் தேவை! பொதுவாக எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் தேவை! இல்லையென்றால் உங்கள் ஒவ்வொருவரின் “சிர்றும்(سر)” பொது மக்களுக்குத் தெரியாமலே போய்விடும்.
*நீங்கள் மட்டும்தான் மக்களை ஏமாற்றலாமா? ஏன் முபாறக் மௌலவியும் அதைச் செய்யக்கூடாது? எந்த வகையில் அவர் அதற்கு தகுதியற்றவர்? உங்கள் எல்லோருக்கும் உள்ள தகுதிக்கும் மேலாக மௌலவிப்பட்டமும் அவருக்குண்டு!
கடைசியாக, பதில் ரெடியாக்கி வையுங்கள், மௌலவிக்கும் பெரிதாக செய்ய ஒன்றுமில்லையாதலால், உடன் பதில் வரும்!
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்புக்குரிய சகோதரர் ரமழான் அவர்களே தற்போது எமது சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை எவ்வாறு வெற்றி கொள்வது என்பதை மட்டும் பாருங்கள் அதன் பின்னர் இது போன்றவர்களை பற்றி பேசலாம் இப்போது இவை பற்றி பேசி எமக்குள் பிரிவினை உள்ளது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாம் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
அன்புடன் அப்துல்சலாம்
Ramlan averkela muslim pirecinai thoderpake unge Leader seithethu nne.
ReplyDeletemubarack moulavi solvethil nne pilai undu. (satharene manithan)
muslim cangires Ministry post kake Palli udaike paddethu nru kuri vote patru viru. ippo nne seihinrarkal.
nanum mulim congiress poralithan.
சரியாகச் சென்னிங்க போங்க. பேப்பரையும் இன்டனெட்டையும் நம்பி பொளப்பத் தொடங்கியிருக்கும் கூட்டம் இன்னும் சிலது இருக்கி. இன்டநெட்டப் பாத்தா இவங்க ஏதோ பெரியபட்டாளம் வெச்சி பணி செய்கிறாங்க என்டு நினக்கனும் .உத்துப்பாத்தாத் தான் தெரியும் எல்லாம் சும்மா பம்மாத்து. இவங்க குசுவிட்டாலும் இன்டனெட்டுள நாறும். திரும்பிச் சலாம் சொன்னாலும் அதையும் வெப்புள கக்கிருவாக இவங்கலெல்லாம் உலமாவாம் இவங்களுக்கும் கூட்டமாம்...... இந்த நெட்ட நம்பி பொளப்பு நடத்திறது எப்படியென்டா நம்மட பொடியன்மாறு பாதாம் பருப்ப நம்பி கலியானம் முடிக்கிற மாதிரித்தான்னடா தம்பி....
ReplyDelete