சிறிய அசம்பாவிதம் நிகழ்ந்தாலும், அது முழுமையான அணு ஆயுதப் போராக மாறும்
எல்லைப் பகுதியில் சிறிய அசம்பாவிதம் நிகழ்ந்தாலும், அது முழுமையான அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என்று வடகொரியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வடகொரியா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,
இப்போதைய நிலையில, வடகொரியா, தென்கொரியாவுக்கு இடையிலான உறவுகள் போர் காலத்தில் இருக்கும் நிலைமைகளை ஒத்திருக்கிறது. எனவே, எந்த விவகாரமானாலும் போர் கால நடைமுறைகளின்படிதான், தென்கொரியாவுடன் பேச்சு நடத்துவோம். கொரிய தீபகற்பத்தில் அமைதியும் இல்லாத, போரும் நிகழாத இப்போதைய சூழ்நிலை முடிவுக்கு வந்துவிட்டது. பிரச்னை அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடல், நில எல்லைப் பகுதியில் சிறு அசம்பாவிதச் சம்பவம் நிகழ்ந்தாலும், அது போராக மாறிவிடும். அணு ஆயுதப் போர் ஏற்படவும் வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சனிக்கிழமை வடகொரியா விடுத்துள்ள மிரட்டல் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தென்கொரியா அரசு, ""இதில் புதிதாக ஒன்றுமில்லை. ஆத்திரமூட்டும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக இதுபோன்ற மிரட்டல்களை விடுத்து வருகிறது.
Post a Comment