Header Ads



தமிழ்நாட்டில் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் - முஸ்லிம் கவுன்சில் கண்டனம்


அண்மைக்காலமாக இந்தியாவில் பெளத்த பிக்குகள் தாக்கப்படுவதைக் கண்டிப்பதாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் என்.எம்.அமீன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
பல்வேறு தேவைகளுக்காக தமிழ் நாட்டுக்குச் சென்ற இலங்கையர்களை குறிப்பாக பௌத்த பிக்குகளை தமிழ்நாடு பிராந்தியத்தில் இருக்கும் தீவிரவாத, இனவாதக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கையர் என்ற வகையில் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா பலமாகக் கண்டிக்கின்றது.
இந்நாட்டு மக்கள் தமிழ் நாட்டுக்குச் செல்வதும் அங்கு வாழும் பல்வேறு தரப்பட்ட மக்களுடனும் ஆட்களுடனும் கொடுக்கல் வாங்கல்களைச் செய்வது அவர்களை எதிரிகளாக அன்றி நண்பர்களாகவும் பிரதானமாக மனிதர்கள் என்று அங்கீகரித்தால் அவர்களுடைய மனித பழக்கவழக்கங்கள் மீது நம்பிக்கை வைத்தால் தமிழ் நாட்டில் வாழும் ஒரு சிறிய குழுவினர்களால் செய்யப்படும் இவ்வாறான தாக்குதல்களால் பிராந்தியத்தில் வாழும் முழு மக்கள் தொடர்பான நம்பிக்கையை பாதிக்கின்றது.
பல்வேறு நாடுகளுக்கிடையிலேயும் சமூகங்களுக்கிடை யேயும் தலைவர்களுக்கிடையேயும் எந்த வகையிலான பிரச்சினைகள் மற்றும் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவது குற்றமாகும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் நாட்டில் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களுக்கிடையிலான தலைவர்கள் தமது ஆத்திரமூட்டும் அறிக்கைகளினால் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக எமது பலத்த கவலையையும் வெறுப்பினையும் தெரிவிக்கின்றோம்.
இந்தச் சம்பவத்தின் மூலம் கௌரவத்திற்குரிய புத்த பிக்குகள் இருவர் இரு நாட்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவை இந்திய இலத்திரனியல் ஊடகங்களின் பலமான மனக்கசப்பு ஏற்படக் கூடிய வகையில் ஒளி, ஒலிபரப்பப்படுவதும் உடனடி நிகழ்வுகளா அல்லது வேறு நோக்கங்களுக்காக திட்டமிட்ட காரணியா என்பது குறித்து கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பது எங்களது கருத்தாகும்.
இந்தத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு தாக்குதலில் ஈடுபட்டோர் பயன்படுத்தியது இலங்கையில் இடம்பெற்ற அல்லது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அல்லது இடம்பெற்றதாகக் கருதப்படும் நிகழ்வுகளாகும். எனினும் அவ்வாறு இடம்பெற்ற அல்லது இடம்பெற்றதாக, அல்லது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறும் நிகழ்வுகள் மூலம் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்த முடியாதென நாங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றோம்.

3 comments:

  1. muslimkalukku nadappathayellam parthukkondu irunthuwiddu budda pikkukalukku oru pirachinai enrathum konthalikkirarhal

    ReplyDelete
  2. While they attack to muslims you all silence......pls give your voice for all buddist racism also......

    ReplyDelete
  3. muslim council muslim galukku ethiraaka nadaipetra ella pirachchinai kalin poothum kural koduthtu thaan irukkirathu

    muslim councl enna senjathu endu .....samuuka akkaraiyulla ellaarukkum theriyum ..
    summa madaththanmaaka comment pannama poongappaa

    ReplyDelete

Powered by Blogger.