யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவிகள்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் அம்மக்களுக்கு சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ் மாநகர சபை உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவின் இணைப்பாளருமான மௌலவி சுபியான் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய மக்களின் நிலைகுறித்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஐம்பது குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் பத்து குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டதுடன் வீடுகளை அமைப்பதற்கு தேவையான கூரைத்தகடுகளும் வழங்கப்பட்டன.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கடந்த வியாழக்கிழமை(21) யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இவற்றை பயனாளிகளிடம் கையளித்தார்.
Post a Comment