மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழிலை பயிற்சிப் பட்டறைகள்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் (திவிநெகும) மன்னார் மாவட்ட இளைஞர், யுதவிகளுக்கு சுயதொழிலை மேற்கொள்ளும் வகையில் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகிறது.
வர்த்தக வாணிப அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால் இப்பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 244 பேர் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளடன் மேலும் 46 பேர் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கான பயிற்சிகள் விரைவில் நடைபெறவுள்ளது.
தமிழ்மொழியிலான பயிற்சி நெறியை இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி எம்.ஐ. றமீஸா பானு மேற்கொண்டு வருகிறார்.
பயிற்சிகளை முடித்தவர்களுக்கு இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் தரமான சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் திவிநெகும திட்டத்தின்கீழ் சுயதொழிலை ஊக்கும் வகையில் உதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான பயிற்சிகள் யாழ்ப்பாணத்திலும் ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
Post a Comment