இன விரிசலுக்கு காரணமாகி விடாதீர்கள்..!
(safran saleem)
இனவாத செயற்பாடுகள் இன்று இலத்திரனியல் ஊடகங்களினூடகவும் முடுக்கி விடப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உதாரணமாக FACE BOOK, TWITTER இனூடாக இனவாத துவேஷ கருத்துக்களை இனவாதிகள் பரப்பி வருகிறார்கள். அதற்கு எம்மில் சிலர் பதில் கருத்து (COMMENT) கொடுக்க முற்படும் போது அவர்கள் பானியிலே கருத்து (COMMENT) களை முன்வைக்க முற்படுகிறார்கள். இதனால் அங்கு இரு மதங்களும், இனங்களும் சீண்டப்படுகின்றது.
அவ்வாறு கருத்து தெரிவிப்பின் குறித்த இனவாத அமைப்புக்கள் குறித்தும், இனவாதிகள் குறித்தும் மட்டுமே கருத்து வெளியிடவேண்டும். மாறாக கருத்து வெளியிடும் பட்சத்தில் நாமே இன விரிசலுக்கு காரணமாகி விடுவோம்.
ஆகவே ஆவேசமான முறையில் எமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாது நிதானமான முறையில் சிந்தித்து செயற்படல் வேண்டும். FACE BOOK இல் COMMENT பண்ணும் போது நாகரிகம் பேண வேண்டும். ஏனைய மதங்களை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் காவிப் பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தை பாவிப்பதை அனைத்து மட்டத்திலுள்ளவர்களும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தேரர்ரகளில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என்பதனை மனதில் நிறுத்த வேண்டும். அதே போல் பௌத்த மதத்தயோ, சிங்கள இனத்தையோ சீண்டி கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்ந்து கொள்ளல் வேண்டும். பெரும்பான்மை இன மக்களில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என்பதனையும் மனதில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது மார்க்கத்தை எத்திவைக்கும் விதத்திலும் உண்மை நிலவரத்தை எடுத்துக்காட்டும் விதத்திலும் கருத்துக்களை அதிகம் அதிகம் வெளியிட வேண்டும். அதன் மூலம் இனவாதிகளின் கருத்துக்களுக்கு அடிமையாகும் சாதாரன மக்களுக்கு உண்மையை புரிய வைக்கலாம்.
உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரரே!
ReplyDeleteமிகவும் ஆணித்தரமாகவும் அழகாகவும் கூறிஇருக்கிறீரகள் சகோதரர் Safran Safeer அவர்களே. உண்மையி மிகவும் கோப்படுவர்களில் ஒருவனாக நானும் உள்ளேன் இவர்களின் கூற்றுக்களையும் பேச்சுக்களையும் ஊடகங்களினூடாகப்பார்கும்போது என்னையே அறியாமல் ஆத்திரமாக இருக்கின்றது இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டது போல பொது பல சேன மட்டும்தான் முஸ்லிம்களை எதிர்க்கின்றனர் இது மொத்த பெளத்த இனத்திலே மிகவும் குறிகிய அளவானவர்கள்தன் என்பதுவும் மற்றயபெளத்தர்கள் முஸ்லிம்களோடு அன்னியோன்யமாவும் பழகுவதுடன் பொதுபலசேன கூட்டத்தையும் அவர்களின் செயற்பாடுகளையும் எதிர்க்கின்றார்கள் வெறுக்கின்றார்கள். ஆகவே நமது அடிப்படையான, பகிரங்கமான எதிரிகள் பொதுபலசேனதான் இதில் எதுவித சந்தேகத்திற்கும் இடமில்லை, இருப்பினும் இவர்கள் எம்மவர்கள் அடிப்படையில் மட்டுமல்ல உதாரணமாக கசையடியை நிறுத்துவதற்கு இவர்களுக்கு உரிமையைக்கொடுத்தது யார்???? எதைச்சொல்லியாவது நம்மவர்களை அவேசப்படுத்துவதே அவர்களின் வெளிப்படையான குறியாகவுள்ளது எனவே இதை திசைதிருப்ப புதியதோர் யுக்தியை நாம் கையாளவேண்டும் எல்லோரும் நாம் ஒருவருக்கொருவர் அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, அவர்களூம் இப்படியே குழப்புவதும் நாம் இறுதிவரைக்கும் பொறுமையுடன்தான் இருக்கப்போகின்றோம் இதில் சந்தேகமில்லை ஆனால் அவர்கள் இன்னும் இறங்கி கீழ்மட்டத்திற்கு வர்வத்கு முன்பு அரசாங்க மட்டத்தில் நாம் ஒரு நல்லதீர்வீனை எடுப்பதற்கு முயற்சி செய்வோம் ஏனெனில் இப்பிரச்சினைக்கு மூலகாரணமே அரசாங்கம்தான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது இது நமக்கு ஒரு நல்லபாடமாகவும் இந்த அரசாங்கத்துக்கும் நல்ல நெற்றியாடயாகவும் இருக்கவேண்டும்... உண்மை என்ன தெரியுமா அரசாங்கம் தன் தலையில் தன்கைகளாலேயே மண்ணைவாரிக்கொட்டிக்கொண்டது அவ்வளவுதான் இன்ஸா அல்லாஹ் குறிப்பிட்டகால் எல்லைக்குள் அரசாங்கம் சரியான தீர்வொன்றை எடுக்காவில்லையெனில் அதன் பின் பழமைவாதிகளின் பழமொழியொன்று உண்டல்லவா கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்று அதேபோலாகிவிடும்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றிகள் எமது ஓழுக்கத்தையும் பண்பாட்டையும் நாங்கள் இழக்கக் கூடாது "அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது" நாங்கள் அவரைத்தானே பின்பற்றுகின்றோம்
ReplyDeleteமுற்றிலும் உண்மை
ReplyDeleteyes good information thanks
ReplyDeleteநாட்டில் உள்ள அணைத்து பௌத்த பீடங்களின் தலைமைகளையும் வினவிபாருங்கள் பொதுபலசேனையை அவர்கள் முழுமையாக ஆதரிக்கும் உண்மை புறியும் மதவாதம் மின்னாமல் முழங்காம்ல் ஆழமாக வேறூன்றி இருப்பதை அறியாமல் ஏன் இவ்வளவு அப்பாவித்தனமாக இருக்கின்றீர்கள் மரணத்திட்கு அவ்வளவு பயமா??? நம்மை இழிவுபடுத்துவதை எவ்வளவு தூரம் சகிக்க வேண்டும் எங்கிறீர்கள் தாத்தாரிகளின் பெண்கள் நில் என்று வீதியில் செல்லும் ஸ்பானிஸ் முஸ்லிமை கட்டளை இட்டு நிறுத்தி வைத்து விட்டு வாள் எடுத்து வந்து நிட்பவனின் தலையை கொய்தார்களே அந்த அளவா நாமும் பணிந்துபோக வேண்டும் இந்த உலகமே எதிர்து நின்றாலும் அசல் ஈமான் உள்ள மனிதனுக்கு எதைபற்றி என்ன பயம் இருக்க முடியும்???
ReplyDeleteJeshakallah
ReplyDeleteThanks
ReplyDelete