அமைச்சரின் மகனுக்காக களத்தில் குதித்துள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள்
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
பிரதி பொலிஸ் மா அதிபர் வைத்தியலங்காரவின் மகன் அசேல தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரனை (08.03.2013) வாழைச்சேனை நிதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மகன் ஆகியோருக்கிடையில் பாசிக்குடா கடற்கரையில் கடந்த பெப்ரவரி 24ம் திகதி ஏற்பட்ட கைகலப்பையடுத்து அமைச்சர் மைத்திரிப்பால சிறிசேனவின் மகனும் அவரது நண்பர்களும் கல்குடாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரனை வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிபதி இரு தரப்பினரக்கிடையிலான நல்லுரவைப் பேனும் பொருட்டும் சமரசமாக தீர்த்து வைக்கும் முகமாகவும் வாழைச்சேனை மத்தியஸ்த சபைக்கு இந்த விடயத்தினை எடுத்துச் செல்லுமாறும் மத்தியஸ்த சபையில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கமைவாக எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி எடுக்கப்படுகின்ற விடயங்களை சமர்பித்து மீண்டும் நீதிமன்றம் அஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனாவின் சார்பாக சட்டத்தரணிகளாக பைஸர் முஸ்தபா, லலித் திஸாநாயக்கா, மில்ஹான் கரீம், மதுர லிதானகே, டி.பி.மென்டிஸ், என்.எம்.சஹிட், எம்.எம்.எம்.ராசீக், ஹபீப் ரிபான் உட்பட பதினொரு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனா மற்றும் அவரது நண்பர்களும் ஆஜராகியிருந்தனர்.
Post a Comment