யாழ் ஒஸ்மானியா புதுப்பொலிவு பெறும்- மௌலவி சுபியான் தெரிவிப்பு
(பா.சிகான்)
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் பௌதீக தேவைகளை நிவர்த்தி செய்யவென விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் ஏ. சந்திரசிறியிடம் யாழ் மாநகர சபை உறுப்பினரும் ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி ஆளுநரிடம் அவரது செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள், கட்டுமானத்தேவைகள்,பௌதீகத்தேவைகள், பல வருடங்களாக காணப்பட்டன.
ஆளுநர் மூலம் படிப்படியாக நிதியுதவி பெறப்பட்டு இக்கல்லூரியை அபிவிருத்தி செய்து வருகிறேன். இவ்வருடம் ஒஸ்மானியாக் கல்லூரியின் பொன் விழா வருடமாக இருப்பதனால் இன்னும் பல்வேறு வேலைகளை முடிப்பதற்கு இவ்வருடம் நிதி ஒதுக்கீட்டை செய்து தருமாறு மீண்டும் கேட்டிருந்தேன்.
இவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஒஸ்மானியாக் கல்லூரியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தி தருவதாகவும்,இதனை அமெரிக்க தூதுவராலயம் மூலம் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். மேலும் இவ்வேலைத்திட்டங்களை நேரில் வந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்ததாக மாநகர சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment