இஹ்வானுல் முஸ்லிமின் செம்மரி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் - மன்னர் அப்துல்லா
ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லா அமெரிக்க சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிராந்திய நாட்டு தலைவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.
எகிப்து ஜனாதிபதி முர்சிக்கு பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினையின் ஆழம் புரியவில்லை என்றும் துருக்கி பிரதமர் ஜனநாயகத்தை பஸ் ஓட்டுவதைப் போல் பார்க்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னர் அப்துல்லா “தி அட்லான்டிக்” சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு செம்மரி ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்றும் ஒரு சில மேற்கு நாடுகள் அதனைப் புரிந்து கொள்ள தவறியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்துடன் பலஸ்தீனப் பக்கத்தில் இருக்கும் குழப்பங்களை பார்க்காமல் மொஹமட் முர்சி இஸ்ரேலிய பிரச்சினைக்கு தீர்வுகாணப் பார்க்கிறார் என அப்துல்லா குறிப்பிட்டார்.
Post a Comment