வருமுன் காக்கத் தவறிவிட்ட நாம்..!
''ஹலால் ஹலால்'' என்ற வார்த்தைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ''விதி, நமக்கு நன்மையானதாக இருப்பினும் தீமையாக இருப்பினும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்துள்ளது'' என நம்பிக்கை கொள்வது ஈமானின் இறுதி அம்சமாகும்.
ஒருமுறை அண்ணலார் நபி (ஸல்) அவர்கள், முஃமினின் நிலைப்பாடு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவனுக்கு நல்லது நடந்துவிட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நல்லதாக இருக்கிறது. அவனுக்கு சங்கடம் ஏற்பட்டால் பொருமையைக் கடைப்பிடிக்கின்றான். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கிறது. இந்நிலை முஃமினிடமே அன்றி வேறு யாரிடமும் காணமுடியாது'' எனக் கூறினார்கள்.
எனவே, நடந்து முடிந்ததை அல்லாஹ்வின் நாட்டம் என்று விட்டுவிடுவோம். இதனை அடுத்து எமக்கெதிராகப் பட்டியலிடப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து அவசரமாக சிந்தித்து தக்க நடவடிக்கைகள் எடுப்போம். அதன் முதற் கட்டமாக நாளை வெள்ளிக்கிழமை. பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் குத்பா உரைகள் யாவும் இனவெறிக் கும்பல்களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய ஓரு தெளிவை மக்களுக்கு எடுத்துக் கூறுவதாக இருப்பது இன்றியமையாததாகும்.
அதே வேளை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அரசியல் உறுப்பினர்களுடனும், ஊர்த்தலைவர்களுடனும் ஆலோசனை செய்து ''நாம் இந்நாட்டு மக்கள் அன்றும், இன்றும், என்றும் சமாதானத்தையே விரும்புபவர்கள்'' ''எமக்கெதிராக பொய்யான தகவல்களை வழங்காதீர்கள்'' ''புத்தர் காட்டிய ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள்'' போன்ற எமது உண்மை நிலைப்பாட்டை மாத்திரம் சுட்டிக் காட்டும் பதாதைகளைத் தயாரித்து கோசங்கள் எதுவும் எழுப்பாமல் அமைதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது அவசியமாகும்.
இவ்வாறான எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இறங்காமல் ''ஹுதைபிய்யா'' உடன்படிக்கையை மாத்திரம் கூறிக்கொண்டு பொறுமை பொறுமை என்றே இருந்தால் நாம் கோழைகள் தாம் என்பதை ஏற்றே ஆக வேண்டும். ஹுதைபிய்யா நடந்த அதே ஆண்டு தான் பைஅதுர் ரிழ்வான் உடன்படிக்கையும் நடந்தது. காபிர்களிடம் தூதுவராகச் சென்ற உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியபோது நபி (ஸல்) பொறுமை பற்றிக் கூறவில்லை. ''உயிரிருக்கும் வரை போராடுவதாக'' 1400 ஸஹாபக்களிடமும் நபியவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள். ஸுரதுல் பத்ஹ் 18 ஆவது வசனத்தின் விளக்கத்தைப் பாருங்கள்.
''அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டவர்கள் எவரும் நரகில் நுழையமாட்டார்கள்'' என அதே ஸஹாபக்களைப் பற்றி புகழ்ந்துரைத்தார்கள் நபியவர்கள்.
அபூ ஸுப்யானின் வனிகக் கூட்டத்தை இடைமறிப்பதற்கு ஏன் ஒரு குழுவை ரஸுலுள்ளாஹ் அனுப்பி வைத்தார்கள். ரஸுலுள்ளாஸ் மேற்கொண்ட அத்தனை யுத்தங்களும் எதற்காக?
''திடகாத்திரமான பலசாளியான ஒரு முஃமின் கோழையான, பலவீனமான முஃமினை விடச் சிறந்தவன்'' எனவும் நபி (ஸல்) அவர்கள் தானே கூறியுள்ளார்கள்.
எனவே நாம் வீணான சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது மிக மிக அவசியம்தான். ஆனால் அதற்காக எமது உரிமைகளை விட்டுக் கொடுத்து ஏமாளிகளாக நாம் வாழவேண்டியதில்லை.
ஆகவே, நிதானமாகச் சிந்தித்து புத்திசாலித்தனமாகவும், புத்திஜீவிகள் மற்றும் ஆலிம்களுடன் ஆலோசனை செய்து உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் கைகோர்ப்போம். பெண்களின் ஆடைக்கும் பௌத்த மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனை நிரூபிப்பதோடு அதனை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம், அதற்காக இறுதிவரை போராடுவோம் என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம், உறுதிகொள்வோம்.
யா அல்லாஹ்! இந்நாட்டு முஸ்லிம்கள் மீது அநியாயங்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து உரிமைகளை நசுக்கவும், மார்க்க விடயங்களைத் தடுக்கவும் முயற்சிப்போர் மீது எம் கண்களால் பார்க்கவே உன் சோதனைகளையும், வேதனைகளையும் இறக்குவாயாக. ஒரு காற்றின் மூலமாக, ஒரு சத்தத்தின் மூலமாக, ஒரு வெள்ளத்தின் மூலமாக, சில சிட்டுக் குருவிகள் மூலமாக உனக்கு எதிரான கூட்டங்களை அடியோடு அழித்த மகா சக்தியுள்ள இறைவா! எமது மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதில் எமக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளைத் தளர்த்தி கற்களை கடவுளாக ஏற்றிருக்கும் இவர்களை அழித்தொழிப்பாயாக. நாம் செய்த குற்றங்கள் தாம் இச்சோதனைகளுக்கான காரணமாக இருந்தால் எம்மை மன்னித்து நேர்வழியில் வழிநடாத்துவாயாக.
அல்லாஹும்ம ஆமீன்!
ReplyDelete"யா அல்லாஹ் அதுவும் இல்லாவிட்டால் இவர்களுக்கு ஹிதாயத் கொடுப்பாயாக!!!
அவர்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் முழு ஆதரவையும் பெறுவதற்கு ஒரே வழி உலமா சபை கூறவேண்டும் உலமா சபைக்கும் சரீயதுக்கும் நீங்கள் கூறுவதுபோன்று எந்த சம்பந்தமும் இல்லை நாங்கள் என்றும் மத்ஹபு சட்டங்களையும் தரீகா கூத்துகளையும் ஊர்வளக்கங்களையும் உங்களைப்போன்று மனித கருத்துக்களை மார்க்கமாக்கி எல்லோரும் ஒற்றுமையாகவும் இனங்களுக்கிடையில் ஐக்கியமாகவும் எங்கள் உலமா சபை திகழ்கிறது அதுமாத்திரம் அல்ல உங்களைவிடவும் சரியாவையும் வஹாபிகளயும்எதிர்பதொடு அவர்களை பள்ளிக்குவராமல் துன்புருதுகிறோம் இன்னும் உங்கள் நோக்கங்களையும் நிறைவேற்ற முயற்சிக்கிறோம் இதுதான் உலமா சபையின் நிலைப்பாடு
ReplyDeleteஅவர்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் முழு ஆதரவையும் பெறுவதற்கு ஒரே வழி உலமா சபை கூறவேண்டும் உலமா சபைக்கும் சரீயதுக்கும் நீங்கள் கூறுவதுபோன்று எந்த சம்பந்தமும் இல்லை நாங்கள் என்றும் மத்ஹபு சட்டங்களையும் தரீகா கூத்துகளையும் ஊர்வளக்கங்களையும் உங்களைப்போன்று மனித கருத்துக்களை மார்க்கமாக்கி எல்லோரும் ஒற்றுமையாகவும் இனங்களுக்கிடையில் ஐக்கியமாகவும் எங்கள் உலமா சபை திகழ்கிறது அதுமாத்திரம் அல்ல உங்களைவிடவும் சரியாவையும் வஹாபிகளயும்எதிர்பதொடு அவர்களை பள்ளிக்குவராமல் துன்புருதுகிறோம் இன்னும் உங்கள் நோக்கங்களையும் நிறைவேற்ற முயற்சிக்கிறோம் இதுதான் உலமா சபையின் நிலைப்பாடு
ReplyDeletebrother saith you are right but the last para i can't accept.Because allah may rise the flag of islam by using these people in our mother land(insha allah).so ask allah to give hidayah to them.so don't ask allah against them first
ReplyDelete