பொதுபல சேனாக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் - முஸ்லிம் நாடுகளுக்கு விளக்கவும் திட்டம்
நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இனவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த பல செயற்பாடுகளை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் பிரமுகர்கள் தீர்மானித்துள்ளனர்.
(அபித் ஸ்ரீலங்கிகயோ) என்ற கோஷத்துடனே பொதுபல சேனாவுக்கு எதிரான இந்த போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ், மாநகர முதல்வர் முஸம்மில் ஆகியோரும் பங்கேற்றனர்.
(அபித் ஸ்ரீலங்கிகயோ) என்ற கோஷத்துடனே பொதுபல சேனாவுக்கு எதிரான இந்த போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச மட்டத்தில் இச் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தல், மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுத்தல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேரடியாகச் சென்று அந்நாட்டு அரசுகளுக்கு மதவிரோத செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தல், முஸ்லிம்கள் மீதான இனரீதியான செயற்பாடுகள் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமளித்தல் போன்ற தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச கவனத்தை ஈர்க்குமுகமாக அந்தந்த நாடுகளில் முஸ்லிம் பிரமுகர்களிடம் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அரச முக்கியஸ்தர்களைச் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளிப்பதற்கும் இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் கொழும்பு நகரில் பொதுபலசேனா செயற்பாடுகளுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடாத்துவதற்கும், ஏனைய பிரதேசங்களிலிருக்கும், கொழும்பு நகருக்கு வெளியிலிருக்கும் முஸ்லிம்களை ஒன்று திரட்டி எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் எனவும் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ், மாநகர முதல்வர் முஸம்மில் ஆகியோரும் பங்கேற்றனர்.
எமது பிரச்சினையில் அரசியல் இலாபம் அடைய (குளிர் காய) நினைக்கும் எதிர்கட்சியின் அரசியல் தந்திரமோ என்று எண்ணத் தோன்றுகின்றது .
ReplyDeleteஇங்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் அதாவது - ஹலால் பிரச்சினை தீர்வு தொடர்பாக ஒரு கருத்தை கூறிவிட்டு பின்னர் அதிலிருந்து பெல்டி அடித்த ரணிளும், இந்த முசம்மில் என்பவன் இஸ்லாத்துக்கும் எமது முஸ்லிம் சமூகத்திற்கும் மாறான கருத்தைக் கூறியதையும் ....
இவ்வாறான ஒரு போராட்டம் அனைத்து எதிர்க் கட்சிகளையும் (தமிழ்க் கட்சிகளையும்) சேர்த்து, மற்றும் சிங்கள தமிழ் சமூக நல நிறுவனங்களையும் இயக்கங்களையும் ஒன்றிணைத்து முன்னேடுக்கபப் படுமேயானால் அவ்வாறான ஒரு போராட்டத்துக்கே எமது முஸ்லிம் சமூகம் உடன்பட வேண்டும். இல்லையெனில் அது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் ஆகிவிடும்,மேலும் பல பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
aarpattamum yahoodihalin thittam than athil oru nalavum illai verum koshaththudan ellam muduyum 5000 pear aarpatathil eedupaduvathai vida 5 per kalaththili irunguvathu mihavum. uyarvanathu
ReplyDeleteplz dont do your politics in muslim ummah
ReplyDeleteஅப்படி செய்ங்க ஸார், மிச்சம் பெரிய HELP ஆக இருக்கும்!
ReplyDeleteஇவனுகளுக்கு ஒரு வழி பண்ணாட்டி சரி வராது!!!
நீங்க துணிஞ்சி வாங்க ஸார்!
இன்ஷாஅல்லாஹ்,அல்லாஹ் உங்களுக்கு கூலி தருவான்.உதவி செய்வான்!!!
Alhamthulillah
ReplyDeleteஎய்தவன் இருக்க அம்பை நோவானேன்? என்ற பழமொழியும் ஞாபகம் வருகிறது.
ReplyDeleteமுஸம்மிலுக்குத்தானே ஹலால்,ஹிஜாப் எல்லாம் ஹராமாச்சி. அவருடன் சேர்ந்து தீர்மான் எடுத்து என்ன பிரயோஜனம்? பார்த்து செயல்படுங்க கூடவே சேர்ந்து குழி தோண்டிடுவாரு!
ReplyDeleteSalam....
ReplyDeleteThis is the most welcome event. We should do such protests specially against "Podhu Bala Sena" as soon as possible and
we need to explain/exhibit regarding their mad thinks through
out what the Podhu Bala Sena did past few months.
This is not going to be late, please try to start as soon as possible. We are alwasy with you.......
Thanks for UNP members.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
ReplyDeleteஇங்கு முசம்மில் பற்றிய கருத்து கூறியவர்களுக்கு ஒரு சிறு தகவல்.
ஹலால், பர்தா பற்றி பேசிய முசம்ம்மில் ஜே.வி.பி இல் இருந்த முசம்மில் ஆவார். இன்று கொழும்பு மாநகர சபை முதல்வர் ஆக இருப்பவர் UNP சேர்ந்தவர் ஆவார். தயவு செய்து இரண்டையும் குளப்பி கொள்ள வேண்டாம்.