நானும் ஹிஜாப் அணிந்திருந்தால்..!
(காத்த நகர் சகீனத்)
நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட ஹிஜாப் எங்கள் உடையல்ல.... - உயிர்
வெற்று வார்த்தைகளால் விரட்டி விட - அது
வெறும் உணர்வல்ல... - எம் பெண்ணினத்தின் உரிமை
மிரட்டல்களால் துகிலுரிய அவை துப்பட்டாக்கள் அல்ல...எங்கள்
மானம் காக்கும் தோட்டாக்கள்.....
நாங்கள் ஹிஜாப் உடுத்துவது என்னவோ உடலில்தான்...- ஆனால்
எங்கள் உயிரோடல்லவா அதைத் தைத்து வைத்திருக்கிறோம்????
அதைக்களைய உங்களால் ஒருபோதும் முடியாது....
ஹலால் எங்கள் கிணற்றுத்தண்ணீர்.....
திருட்டுத்தனமாய் கவர நினைத்தீர்கள்...
நாங்களே அள்ளிக்கொடுத்துவிட்டோம் - அது எங்கள் பெருந்தன்மை..
ஆனால் ஹிஜாப்????
நாங்கள் அடுப்பெரிக்கும் நெருப்பு
அணைக்க நினைக்காதீர்கள்!!!! எரிந்து போவீர்கள்....
புத்தரின் போதனைகளில் ஒன்றைத்தானும்
உடன் பிறந்தவர்களுக்கே ஊட்ட முடியாத நீங்களா????
உடைக்க நினைக்கிறீர்கள் எங்கள் ஈமானிய உணர்வுகளை...
உடை உடுத்தும் நிர்வாணமாய் அலைகிறாளே உங்கள் இன சகோதரி...
முடிந்தால் அவளுக்கு அறிமுகம் செய்யுங்கள்;..
புத்தர் வறையறுத்த ஆடைகளில் ஒன்றையேனும்...
முடியாது!!!!!!..- உங்களால் முடியவே முடியாது..
உங்கள்; சமூகத்தில் நீங்கள் ஆடுகளாய் மாறிப்போனதினால்தான்
எங்களிடம் வேங்கைகளாய் வேசம்போடுகிறீர்கள்!!!!...
உங்களை அன்புடன் தொட்டுப் பேசியதற்காய் - எம் இனத்தை
வெட்டிப்போடப்பார்க்கிறீர்கள்...- ஆனால்
அந்நிய தேசத்தில் உங்களில் ஒருவன்
அடிமேல் அடிவாங்குகின்றான்... காவியுடைக்காகவும்,,,,
என்றோ நீங்கள் செய்த பிழைக்காகவும்....
இப்போது எங்கே உங்கள்; இணையத்தளங்களும்...
இதயமே இல்லாத கருத்துரைகளும்...
போதி மரங்களில் ஞானப்பால் வடியலாம்!!!!!
ஆனால் இன்று கள்ளிப்பால் அல்லவா வடிகிறது????...
காவியுடைகள் கூட இன்று இனவாதத்தால் கறுத்துப்போய்விட்டன.
மனிதாபிமானமே இல்லா தர்மச்சக்கரங்களுக்குள்
மிதிபடுகிறது எங்கள் பெண்மை..
மிருகவதைக்காய் குரல் கொடுக்கும் உங்கள் தர்மத்தில்
மனித வதைக்கு தாராள அனுமதியோ????
உங்கள் அகோரப்பசிக்கு ஆளான.....
சின்னஞ்சிறுசுகளில் ஒன்றைக்கேட்டுப்பாருங்கள்..
அது சொல்லும்.... நானும் ஹிஜாப் அணிந்திருந்தால் - இந்த
மிருகங்களிடம் இருந்து தப்பியிருப்பேன் என்று....
இத்தனைக்குப் பின்னரும் உங்களை மன்னிக்க மனசு வருகிறது...ஏனெனில்
நீங்கள் முகத்திற்கு முன்னால் நின்று
எங்களை எதிர்க்கும் வீரர்கள் என்பதால்...
பெற்ற தாயின் முக்காடுகள் களையப்படும் பொழுதும்,,,,,,
உடன் பிறந்தவளின் உடைகள் கிழிக்கப்படும் பொழுதும்....,,,
எங்கள் தனித்துவமும் தன்மானமும் நசுக்கப்படும் பொழுதும்,,,,,
எச்சில் ஒழுகும் நாக்குகளை தொங்கவிட்டுக்கொண்டு..
எஜமான விசுவாசத்துடன்...
மௌனமாய் இருக்கிறார்களே எங்கள் அரசியல் தலைமைகள்
அவர்களைவிட நீங்கள் எவ்வளவோ மேல்...
எங்களை வதைத்தாவது நீங்கள் பௌத்தம் வளர்க்க நினைக்கிறீர்கள்....
அவர்களோ!!!! எங்களை விற்றாவது பதவிகளை வாங்க நினைக்கிறார்கள்..
காலவோட்டத்தில் உங்கள் தவறுகள் மறைந்து போகலாம்;;....
கடைசிவரை அவர்களின் துரோகத்தினை மறக்கமாட்டோம்....
மீண்டும் ஒரு முறை அவர்களை பதவியில் இருத்த மாட்டோம்...
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்..- சரித்திரத்தில்
எங்கள் வரலாறு இரண்டு விதமாய் எழுதப்பட்டிருக்கிறது...
சிங்கள அரசனுக்காய் உயிர் துறந்த பெண்மையும் நாங்களே..
சீறிவந்த எதிரியின் தலைகளைக் கொய்த,,,,,
சுமையாக்களும் நாங்களே!!!!
jassakkallahhier..Pls.Translate to shinhala and English Lang...
ReplyDeleteWow that's a nice poem sister,,,,,,,,,
ReplyDeletemaasha allah
ReplyDeleteMASHA ALLAH
ReplyDeleteஎம்மினப் பெண்ணின் எரிகவிதை இது...!
ReplyDeleteஒரு பத்தினியின் இதயத்து அக்கினியாய்த்தான்
இக் கவிதையை என்னால் காண முடிகிறது...!
உயிரில் இழைத்த துணி கொண்டு -இஸ்லாமிய
உணர்வில் முகிழ்த்த நூல் கொண்டு
உருவான பர்தாவை-
உடலுக்கு மட்டுமல்ல-உள்ளத்திற்கும் சேர்த்தேயெம்
உத்தமப் பெண்கள் உடுத்திக் கொள்கிறார்கள்
என்பதை-
புத்தரின் போதனையைக் கூடப் புறமொதுக்கும் அந்தப்
போக்கிரிகளுக்குச் சொல்லும் புல்லட் கவிதை இது...!
பால்மனம் மாறா பாலகரிடத்தும் பாலியல் வக்கிரம் புரியும் அந்த
காதகர் முகங்களில்
காறித் துப்பியிருக்கிறது கவிதை...!
தொடையோடு தொப்புள் காட்டி- இடையோடின்னும் ஏராளம் காட்டி
நடை போடும்-கற்பைக் கடை போடும்
கணிகையரை விட்டுவிட்டு-
கற்பும் மானமும் கண்களென வாழும்
எங்குலப் பெண்களின் ஏற்றமிகு பர்தாவில்
கை வைக்க என்னும் கயவர் கரங்களை
வெட்டி நாய்க்கு விருந்து படைக்க
வீரம் கொண்டெழுவோம் சோதரரே..!
ஹலால் என்பதில் கூட நாம் கை விட்டது
வெறும் இலட்சினையைத்தான்...இலட்சியத்தை அல்ல!
ஆனால்..
ஆடை விடயத்தில் அத்துமீறினால்
பாடை கட்டிப் பரலோகம் அனுப்புவோம்!
நமது
மொத்த அரசியல்வாதிகளையும்
'மொத்து'வது சரியல்ல...அவர்களில்
சாணக்கியர்களும் இருக்கிறார்கள்;
சண்டாளர்களும் இருக்கிறார்கள்.
'கட்டபொம்மன்களும்' இருக்கிறார்கள்;
'எட்டப்பர்களும்' இருக்கிறார்கள்.
தியாகிகளும் இருக்கிறார்கள்;
துரோகிகளும் இருக்கிறார்கள்...!
பிரித்தறிதல்தான் நமக்குக் கொஞ்சம் பிரச்சினையான விடயம்!!
காத்த நகர் சகீனத், உண்மை.... உண்மை .... இந்த மடல் ( கவிதை ) ஒவ்வொரு முஸ்லிமும் வாசிக்க வேண்டும்... எல்லா விடுகளின் சுவர்களில் தொங்க விடப்பட வேண்டும் தினமும் வசிப்பதற்காக...
ReplyDeleteஅன்று தங்களின் கவிதைகள் ( எழுத்தின்) மூலம் மக்களை விளிப்பூட்டினார்கள் அல்லாமா இக்பால், பாரதி போன்றோர்... அந்த வரிசையில் உங்களைப் பார்கிறேன்.. எனது பாராட்டுக்கள்..
இந்த இடத்தில் ஆசாத் சாலியை பாராட்டுவதோடு.... முஸ்லிம் காங்கிரசையும் ( ஹக்கீம் ) முஸ்லிம் அமைச்சர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன். இவர்களைப் போன்றோர் தண்டிக்கப்பட வேண்டும். நிட்சயமாக ராஜபக்க்ஷ அன் கம்பனி தண்டிக்கப்பட வேண்டும்.
Ho Al hamthulillah nalla poem thanks.
ReplyDeleteIthu kavithai alla "VITHAI"
ReplyDeleteunmayana muslim pennukku mattumthan ithu puriyum.
ReplyDelete