வடக்கு முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு, ஹர்தால் அனுஸ்டிப்பு
வடக்கில் முஸ்லிம்கள் பரவலாக வாழும் பிரதேசங்களில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால' அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் கலாசார விடயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இச்செயற்பாடானது இலங்கை வாழ் முஸ்லீம்கள் மத்தியில் மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது விடயம் தொடர்பாக தங்களது அதிருப்தியை அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு வெளிக்காட்டுவதற்காக முஸ்லீம்கள் தங்களது கடைகளை மூடியும் பள்ளிவாசல்களில் பிராத்தனை செய்தும் இன்று (25.03.2013) வெளிக்காட்டியுள்ளனா.
இதன் மூலம் அரசாங்கம் இப்பிரச்சினைக்கான தீர்வை துரிதமாக மேற்க்கொள்ளுமாறும் இன வன்முறை ஏற்படாத வண்ணம் மக்களின் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது பலமான அரசின் கடமையாகும்.
இதனால் இலங்கை வாழ் முஸ்லீம்கள் அனைவரும் பொறுமையை கையாள்வதுடன் ஐவேளைத் தொழுகைகளிலும் துஆப் பிராத்தனைகளில் ஈடுபட வேண்டியது அனைவரதும் கடமையாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லீம்கள் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பமாக இருப்பதனால் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்ப அரசியல் வாதிகள் உலமாக்கள் மற்றும் புத்தி ஜீவிகள் அனைவரது கடமையாகும்.
Post a Comment