ஹமாஸ் + இஹ்வானுல் முஸ்லிமின் எகிப்தில் முக்கிய சந்திப்பு
(Tn) ஹமாஸ் தலைவர் காலித் மிஷால் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமத் பாஹ்தி ஆகியோர் எகிப்து மற்றும் பலஸ்தீன விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கெய்ரோவிலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் இஸ்ரேல் சிறையில் பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மேற்குக் கரை, காசா நிலைவரம், ஹமாஸ், பதாஹ் ஒருமைப்பாடு ஆகியவை தொடர்பில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் போது எகிப்தின் பாதுகாப்புக்கு ஹமாஸ் மற்றும் பலஸ்தீன மக்கள் மதிப்பளிப்பதாகவும் எகிப்து பிரதிநிதிகள் கடந்த காலத்திலும் தற்போதும் எதிர்காலத்திலும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் காலித் மிஷால் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment