யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் காணி அமைச்சின் அலுவலகங்கள்
வடக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் காணி அமைச்சின் அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைக்கு அமைய அமைக்கப்படவுள்ள இந்த அலுவலகத்தால் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகளும் இந்த காரியாலயம் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment